கள்ளக்குறிச்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 352 மக்கள் மனுக்கள்
கள்ளக்குறிச்சி, செப்.15- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 352 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று தீர்வு காணும் வகையில் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சிய ரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகை யில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 346 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 6 மனுக்களும் என மொத்தம் 352 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது விசா ரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை வன நில விவகாரம்: அறிக்கை தாக்கல்
சென்னை, செப்.15- திருவண்ணாமலையில் 554 ஏக்கரை பாதுகாக்கப் ப்பட்ட வனமாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழு, சென்னை உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோதமாக கட்டப் பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி, வழக்க றிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆக்கிரமிப்பு அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நட வடிக்கைகள் எடுக்க முடிய வில்லை என்றும், ஆக்கிர மிப்பு கட்டிடத்துக்கு தந்த குடிநீர், மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.