tamilnadu

வண்டலூர் பூங்காவில் மக்கள் பார்வைக்கு 3 புலிக்குட்டிகள்

சென்னை, ஏப். 20-வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக 3 புலிக் குட்டிகள் விடப்பட்டன. இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-வண்டலூர் பூங்காவில் நம்ருதா என்ற வெள்ளைப்புலிக்கும் நகுலா என்ற ஆண் புலிக்கும் வெள்ளை மரபணு உடைய 3 குட்டிகள் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி பிறந்தன. அதில் 2 குட்டிகள் அடர் வரிகளை பெற்று, அதிக கருமை நிறத்தில் காணப்பட்டன. மற்றொரு பெண் குட்டி அதன் தாயையொத்து வெண் ணிறத்தில் உள்ளது.3 மாதமான 2 கருப்பு மற்றும் ஒரு வெள்ளைநிற புலிக்குட்டிகளை அதன் தாயான நம்ருதாவுடன் பொதுமக்களின் பார்வைக்கு தனி விலங்கு கூடத்தில் விடப்பட்டுள் ளன. இந்த குட்டிகளுடன் சேர்த்து புலிகளின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.வண்டலூர் பூங்காவில் கோடை காலத்தை சிறப்பாக கழிக்க பார்வையாளர்களுக்காக சில புதிய முயற்சிகளை மேற்கொண்டுள் ளது. பூங்கா கடை ஒன்றை திறந்து அதில் விலங்குகளின் படங்கள் பொறித்து நினைவுப் பொருட்கள், சாவிக்கொத்து, குல்லா, பனியன்கள், பொம்மைகள் முதலான பொருட்கள் பார்வையாளர்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. வெகுவிரைவில் இந்த கடையில் விலங்கு சார்ந்த நிறைய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளன. முப்பரிமாண படக்காட்சியான வன உலாவிடம் கடல் நீரடி காட்சிகள் பூங்காவில் தொடங்கப் பட்டு நல்ல வரவேற்பை பெற்று, ஏராளமான பார்வையாளர்கள் கண்டுக் களித்து தங்களது வருகையை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;