tamilnadu

img

போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க 3 நாள் மக்கள் சந்திப்பு இயக்கம்

சென்னை, ஜூலை 25 - போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க கோரி 3 நாள் மக்கள்  சந்திப்பு இயக்கத்தை தொழிலாளர் கள் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

கழகங்களின் வரவுக்கும், செல வுக்கும் வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி தர வேண்டும்,  15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை தொடங்க வேண்டும்,  

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதை கைவிட வேண்டும், காலாவதியான பேருந்துகளை மாற்றாக புதிய பேருந்துகளை வாங்க  வேண்டும், பேருந்துகளுக்கு தேவை யான உதிரி பாகங்களை கொள்முதல்  செய்ய வேண்டும். வாரிசு பணி யிடங்கள், காலி பணியிடங்களை முழுமையாக நிரப்புவதோடு, ஒப்பந்த பணியாளர் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 24-26 தேதிகளில் இந்த இயக்கம் நடைபெறுகிறது.

பேருந்து நிலையங்கள் தோறும் பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தொழிலாளர்கள் கோரிக்கை களை விளக்கி பேசி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வியாழனன்று (ஜூலை 25) பிராட்வே பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

இந்த இயக்கத்தில் சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், கே.கனகராஜ், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்ட னர்.

ஆவடியில் சம்மேளன பொதுச் செயலாளர் சசிக்குமாரும், தாம்பரத் தில் அரசாங்க போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரையும்  பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினர்.

போக்குவரத்து துறையை பலப்படுத்துக

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மின் பேருந்து கள், மினி பேருந்துகளை தனியாரை வைத்து இயக்கவும், பராமரிக்கவும் உள்ளது. போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்க  அரசு முயற்சிக்கிறது. போக்குவரத்து துறைதான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது. எனவே, போக்குவரத்து துறையை பொதுத் துறையாக தொடர வேண்டும், பலப்படுத்த வேண்டும்.

போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர்களின் பணத்தை எடுத்துஅரசு செலவு செய்துவிட்டது. இதனால் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலப் பலன்கள் கிடைக்கவில்லை. ஓய்வு பெற்று 19 மாதம் ஆகியும் பணப்பலன்களை வழங்கவில்லை.  ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம் மறுக்கப்படும். தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்” என்றார்.