tamilnadu

கஜா புயலில் பாதித்தோருக்கு 28,671 வீடுகள்

சென்னை,ஜூலை 4- “கஜா புயலில் பாதித்த மக்க ளுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தென்னை மர பாதிப்புக்கு வழங்காமல் உள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, பேசிய திமுக உறுப்பினர் உ. மதிவாணன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த துணை  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “கஜா புயலால் டெல்டா மாவட் டங்களில் பெரும் சேதம் ஏற்பட்  டது. இதனையடுத்து, பாதிக்கப்  பட்ட வீடுகள் கணக் கெடுக்கப் பட்டு குடிசைபகுதி மாற்று வாரி யம் மூலமாக ரூ.1742.22 கோடி  செலவில் அடுக்குமாடி குடி யிருப்புகள் மற்றும் தனி வீடு கள் 28,671 கட்ட திட்டமிடப் பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்” என்றார். இந்த திட்டத்தின் ஒரு பகுதி யாக நாகை மாவட்டத்தில் 7,458 தனி வீடுகளும், 5,308 அடுக்கு மாடி குடியிருப்புகளும் ரூ.776.04 கோடி மதிப்பீட்டில் 12 நக ரங்களில் கட்ட திட்டமிடப் பட்டுள்ளது. தென்னை மர பாதிப்பு களுக்கு ஏற்கெனவே கணக்கெ டுப்பு நடத்தப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இருந்தா லும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்,“ ஏற்கெனவே தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டாலும், விடுபட்டவர்களுக்கும் வழங்கு வதற்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீண்டும் கணக்கெடுப்பு நடத்த உள்ளார்கள். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்  படுத்திக் கொள்ளலாம்” என்றார்.