tamilnadu

img

தமிழகத்தில் 282 குழந்தைகளுக்கு பன்றிக் காய்ச்சல் - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மொத்தமாக 282 குழந்தைகள் பன்றிக் காய்ச்சலால் (H1N1 flu)  பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் (ஐசிஎச்),  காய்ச்சல் வார்டுகளை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மொத்தமாக 282 குழந்தைகள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 282 குழந்தைகளில், 13 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 215 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 54 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

அதேபோல், மாநிலத்தில் 243 குழந்தைகள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் (ஐசிஎச்) 18 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் ஒருவர் கூட இல்லை என்று தெரிவித்தார்.
 

;