tamilnadu

img

வாழ்வாதாரத்தை இழந்த 25 லட்சம் மோட்டார் தொழிலாளர் குடும்பங்கள்.... ஜூலை 7-ல் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம்.....

சென்னை:
ஒன்றிய மோடி அரசின் பெட்ரோல், டீசல் விலையுயர்வால் அனைத்துப்பகுதி மக்களும் சொல்லொண்ணா துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இதில் 25 லட்சம் மோட்டார்தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ் வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மோட்டார் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஜூலை 7 ஆம்தேதி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு அரசு போக்குவரத்து, ஆட்டோ, சாலைப்போக்குவரத்து சம்மேளனங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

கொரோனாவால் தொழில் முடக்கம்
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நீடித்து வரும் நோய்த்தொற்று மோட்டார் தொழிலை முற்றிலும் முடக்கிவிட்டது. 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் முழுமையாக இயங்கவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும்,வாகனங்கள் அரைகுறையாகவே இயங்கின. நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக நடுத்தர,ஏழை மக்களின் வருமானம் பாதித்தது. இம்மக்களை நம்பி இயங்கிய ஆட்டோக்களும், கால்டாக்சிகளும் போதிய வருமானம் இன்றி பாதிக்கப்பட்டன.  இதன் விளைவு தொழிலைவிட்டு தொழிலாளர்கள் துரத்தப்படும் நிலையை உருவாக்கி யது.  

சுற்றுலா தலங்கள் மூடல், திருமணம் உள்ளிட்ட மக்கள் கூடும் விழாக்களுக்கு கட்டுப்பாடு போன்ற காரணங்களால் லட்சக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் முற்றிலும் முடங்கிவிட்டன. வியாபார வீழ்ச்சி காரணமாக சிறியசரக்கு வாகனங்களுக்கும் வேலை இல்லை. பள்ளி, கல்லூரிகள் மூடியதால் இந்த வாகனங்களில் பணிபுரிந்த பல்லாயிரம் பேருக்கு வேலை இல்லை. வாகனங்கள்  முழுமையாக ஓடாததால்வாகன பராமரிப்பு பட்டறை மெக்கானிக்குகளும் வேலை இழந்து தவிக்கின்றனர்.
மக்களின் பணத்தைபிக்பாக்கெட் அடித்த ஒன்றிய அரசுஊரடங்கு காரணமாக தொழிலே முடங்கியுள்ள நிலையில் தொழிலாளர்களும், வாகனஉரிமையாளர்களும் வருமானமின்றி தவிக்கின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று எரியும் வாழ்க்கையில் எண்ணெய்யை ஊற்றி மேலும் நெருப்பை வளர்க்க வைக்கிறது ஒன்றிய அரசு. இத்துடன் மாநில அரசு போடும் வரியும் எரிபொருள் விலையை அன்றாடம் உயர்த்தி வருகிறது. 2021 ஆம் ஆண்டு இதுவரை மட்டும் டீசல் லிட்டருக்கு ரூ.17-ம், பெட்ரோல் ரூ.14-ம் விலை உயர்ந்துள்ளது. தினமும் 5 லிட்டர் பெட்ரோல்போட்டு வாகனத்தை இயக்கும் ஆட்டோ தொழிலாளி ஓராண்டு காலத்தில் எரிபொருளுக்காக கூடுதலாக செலவு செய்த தொகை ரூ.30ஆயிரம். தினமும் 10 லிட்டர் டீசல் போட்டு தொழில் நடத்தும் கால்டாக்சி தொழிலாளியிட மிருந்து பறிக்கப்பட்ட தொகை 50 ஆயிரம் ரூபாய். 20 லிட்டர் டீசல் போட்டு வாகனம் ஓட்டும்சிறிய சரக்கு வாகனத்துக்கு கூடுதல் எரிபொருள்செலவு ரூபாய் ஒரு லட்சம். 150 லிட்டர் டீசல்போட்டு லாரி ஓட்டும் உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்டது ரூ. 8 லட்சம். பொதுமக்களுக்கு சேவை அளித்து வரும் அரசு போக்குவரத்து இழந்த தொகை ரூ.500 கோடிக்கு மேல். பெட்ரோல் விலை உயர்வு இருசக்கர வாகனங்களையும் இயங்கவிடவில்லை. இருசக்கர, நான்கு, ஆறுசக்கர ஒர்க் ஷாப் மெக்கானிக்,  எலக்ட்ரீஷியன், வெல்டர் ஆகியோர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். ஊரடங்கு காலத்தில் உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு வங்கியில் பணத்தைச் செலுத்திய போது ஒன்றிய மோடி அரசு மக்களின் பாக்கெட்டில் உள்ளபணத்தைக் கூட பிக்பாக்கெட் அடிக்கிறது.

பறிமுதலாகும் வாகனங்கள் 
ஊரடங்கு காலத்தில் ஓடாத வாகனங்க ளுக்கு தவணை கட்ட நிதி நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கின்றன. கடந்த ஊரடங்கின்போது தவணைத் தொகை செலுத்துவதிலிருந்து ஆறு மாதத்திற்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டது. அந்த காலத்திற்கும் வட்டி போட்டு தவணை காலத்தை நீட்டித்தன நிதி நிறுவனங்கள். இந்த வருடம் ஊரடங்கின்போது அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. தவணை கட்டமுடியாத நிலையில் வாகனங்களை பறிமுதல் செய்ய நிதி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. 

வாழ்வாதாரம் பறிபோகும் நிலை 
ஊரடங்கு காலத்தில் ஓடாத வாகனத்திற்கு இன்ஷூரன்ஸ், சாலைவரி கட்ட வேண்டும். எப்சிஎடுக்க வேண்டும். அரைகுறையாக வாகனம் இயங்கும்போது டோல்கேட் கட்டண கொள்ளை என அடிமேல் அடிக்கிறது ஒன்றிய அரசு. இப்போதோ புதிய மோட்டார் வாகனசட்டப்படி எப்சியும் தனியாருக்கு கொடுக்கப் பட்டுவிட்டது. ஓட்டுனர் உரிமம் வழங்குவது உட்பட கார்ப்பரேட்  வசமாகிவிட்டது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியும் அதன் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாற்றப்பட்டுவிட்டது.

செயல்படாத வாரியம்
வாகனம் இயங்காத காலத்தில் வாரியத்தில்உதவிபெற பதிவு செய்யலாம் என்றால் ஆன்லைன் பதிவு எனக்கூறி வாரிய பதிவை குழப்பி சென்றுவிட்டது அதிமுக அரசு. வாரியப்பதிவை நிபந்தனை ஆக்காமல் மோட்டார் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கொடுக்கவேண்டும். 

ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு
பயணிகள் போக்குவரத்து, லாரி, ஆட்டோ, மேக்சி கேப், கால் டாக்ஸி, சிறிய சரக்கு வாகனம், பள்ளி வாகனம், பயிற்சிப் பள்ளிகள், இருசக்கர, நான்கு சக்கர, ஆறு சக்கர வாகன ஒர்க் ஷாப் என தமிழகத்தில் மட்டும் 25 லட்சம் மோட்டார்தொழிலாளர்கள் உள்ளனர். 25 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, இந்த பெருந்திரள்போராட்டம் நடைபெறுகிறது என்று மூன்று சம்மேளனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;