ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனையில் 24 மணி நேர விபத்து பிரிவு
மாதர் சங்க சோழிங்கநல்லூர் பகுதி மாநாடு கோரிக்கை
சென்னை, ஜூலை 14 - ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் விபத்து பிரிவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாதர் சங்கத்தின் சோழிங்கநல்லூர் பகுதி 15 வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 14) பெருங்குடியில் நடைபெற்றது. மாநாட்டில், கண்ணகி நகர், செம்மஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும், கண்ணகி நகர், எழில் நகரில் உள்ள பழுதடைந்த வாரிய குடியிருப்புகளை புதுப் பித்து கட்டித் தர வேண்டும், பர்மா காலனி யில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதித்தலைவர் மணிமேகலை சங்கக் கொடியை ஏற்றி, மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். வெண்மதி வரவேற்க, மாலதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தென்சென்னை மாவட்டத் தலைவர் சரவணசெல்வி தொடக்க உரை யாற்றினார். பகுதிச் செயலாளர் ஆர்.சாந்தா வேலை அறிக்கையும், பொருளாளர் பானுப்பிரியா வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். முன்னாள் மாநிலச் செயலாளர் கே.வனஜகுமாரி மற்றும் சிவக்குமார் (வாலிபர் சங்கம்), பூங்காவனம் (கட்டுமான சங்கம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாவட்ட பொருளாளர் ஜெ.ஜூலியட் நிறை வுரையாற்றினார். 13 பேர் கொண்ட பகுதிக்குழுவின் தலைவராக பானுப்ரியா, செயலாளராக ஆர்.சாந்தா, பொருளாளராக மணிமேகலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.