tamilnadu

சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு

சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு

அம்பத்தூர், ஆக. 16- பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்து களில் 2 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூர் அருகே மேலக்கொண்டை யூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வர் சத்யானந்தம்(60). இந்த நிலையில் சனிக்கிழமை சத்யானந்தம் இருசக்கர வாக னத்தில் குன்றத்தூருக்கு சென்று கொண்டி ருந்தார். இவர் வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்ட சாலை பூந்தமல்லி அருகே நசரத் பேட்டை பகுதியில் வந்த  போது, பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்டு படு காயமடைந்த சத்யானந்தம் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வர் ராஜேந்திரன்(58). இவர் திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை ஆவடி- பூந்தமல்லி சாலை காடுவெட்டி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆவடி நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடங்களுக்கு சென்று சத்யா னந்தம், ராஜேந்திரன் ஆகிய இருவரது சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக் காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படை யில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான லாரி ஓட்டு நர் ராஜ்குமார்(26), இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மனோஜ் குமார்(41) ஆகிய இருவரை சனிக்கிழமை கைது செய்தனர்.