உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது
சென்னை, ஆக. 2- சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராஜா ராமன்(54). இவர், கடந்த மாதம் 18ஆம் தேதி எழும்பூரில் உள்ள வணிக வளாகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாராமனுக்கு ஏற்கனவே அறிமுகமான நீலாங்கரை சேர்ந்த ராகேஷ் (30), கண்ணகி நகரை சேர்ந்த அய்யப்பா (36) உள்ளிட்டோர் வந்தனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்யும் ராஜேஷிடம், ராஜாராமன் பணம் கேட்டார். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராகேசும், அய்யப்பாவும் சேர்ந்து ராஜாராமனை கடுமை தாக்கி, கீழே தள்ளி விட்ட னர். இத் தாக்குதலில் பலத்தக் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜாராமன் கடந்த 25ஆம் தேதி உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த ராகேஷ், அய்யப்பா ஆகிய 2 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.
பிஎஸ்என்எல் சுதந்திர தின இலவச திட்டம் துவக்கம்
புதுச்சேரி, ஆக. 2 - சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி புதுச்சேரி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு மாதத்திற்கு இலவச திட்டம் துவக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: - பிஎஸ்என்எல் சுதந்திர தின திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஆகஸ்டு மாதத்தில் பிஎஸ்என்எல் -ன் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக ரூ. 1 என்ற விலையில் வழங்குகிறது. இது இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் உள்ள நம் நாட்டில் உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவச அனுபவிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இதில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ், வேலிடிட்டி 30 நாட்கள் மற்றும் இலவச சிம் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
கைப்பேசிகளுக்கு சலுகை வழங்கும் ஐக்யூஓஓ
சென்னை, ஆக.2- உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டான ஐக்யூ ஓஓ, பிரபலமான ஸ்மார்ட் போன்களுக்கு ஏராள மான சலுகைகளை அறி வித்துள்ளது. அமேசான்.இன் இணையதளத்தில் ‘அமே சான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் விற்பனை 2025’ துவங்கி உள்ள நிலையில் சனிக்கிழமை பகல் 12 மணி முதல் இதன் நேரடி விற்பனை துவங்கியது. இதில் ஐக்யூஓஓ நியோ 10, ஐக்யூஓஓ நியோ 10ஆர், ஐக்யூஓஓ இசட்10 மாடல்கள் மற்றும் ஐக்யூஓஓ இசட்10 லைட் ஸ்மார்ட்போன்களுக்கு இந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை வழங்கு கிறது. எனவே வாடிக்கை யாளர்கள் இந்த சலு கையை பயன்படுத்தி அவர்க ளுக்கு விருப்பமான ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். இசட்10 லைட் ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி உடன், நாள் முழுவதும் பொழுது போக்கு மற்றும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்ப ட் டுள்ளது.இசட்10எக்ஸ் ஸ்மார்ட் போனில் 6500 எம்ஏஎச் பேட்டரி உடன் 44வாட்ஸ் பிளாஷ்சார்ஜ் உள்ளது. 120ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி மற்றும் 1050 நிட்ஸ் பிரகாசத்துடன் கூடிய 6.72-இன்ச் எப்எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே 728கே என்ற AnTuTu மதிப்பெண்ணுடன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5G சிப்செட்டால் இயக்கப்படுகிறது.