இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி: நிர்வாக உதவியாளர்
காலியிடங்கள்: 1,773
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரிவதற்கான அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது உயர்நிலை கல்வியாகவோ அல்லது கணினி சார்ந்த சான்றிதழ் படிப்பாகவோ பயின்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரா்கள் https://cag.gov.in என்ற இணையதளத்தின் மூலம் செப்-17 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://cag.gov.in அல்லது https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-064e7307040d1e6-69903981.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.