tamilnadu

img

தீபாவளிக்கு ஆவினில் ரூ.149 கோடிக்கு ஆர்டர்

சென்னை, அக்.30- ஆவினில் தீபாவளிக்கு இது வரை ரூ.149 கோடிக்கு ஆர்டர்  வந்துள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திங்களன்று (அக்.31) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “சென்னையில் ஆவின்  பால் விற்பனை தற்போது அதி கரித்துள்ளது. இது கடந்தாண்டை விட 20 விழுக்காடு அதிகம்” என்றார்.

இதுவரை ரூ.32 கோடி ஆவின் பொருட்கள் விற்பனை யாகி உள்ளன. பால் கொள் முதலை அதிகரிக்க உற்பத்தி யாளர்களுக்கு அதிக எண்ணிக் கையில் மாடுகள் வாங்க கடன்  உதவி செய்வது உள்ளிட்ட  நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தீபாவளியை முன்னிட்டு மைசூர் பாகு, பால் கோவா, நெய்,  காஜி கட்லி, பிஸ்தா ரோல், முந்திரி அல்வா, மில்க் கேக்,  நெய் லட்டு உள்ளிட்ட இனிப்பு கள் கூடுதலாக தயாரிக்கப்படும். அனைத்து இனிப்பு வகைகள் அடங்கிய ‘காம்போ பேக்’ ஆகவும் விற்பனை செய்யப்பட் டுள்ளது. விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஆவின் பொருட்களை சந்தைப்படுத்த மொத்த, சில்லறை விற்பனை யாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட ஆவின்  இனிப்பு வகைகள் பொதுமக் களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த  ஆண்டும் தரமான சிறப்பு இனிப்பு  வகைகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை 20 விழுக்காடு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.