tamilnadu

img

அடை மழையிலும் விடாத அடை மழையிலும் விடாத 7வது நாளில் சென்னையை நெருங்கியது; வழியெங்கும் உற்சாக வரவேற்பு

காஞ்சி/செங்கல்பட்டு, டிச.1- வன்முறையற்ற, போதையற்ற தமிழகம் என்ற முழக்கங்களுடன் சென்னை கோட்டையை நோக்கி அணிவகுத்து வரும் ஜனநாயக மாதர் சங்கத்தின் நடைபயணக்குழுக்கள் கொட்டும் மழையிலும் உற்சா கத்துடன் சென்னையை நெருங்கி வருகின்றனர்.
புதுமைப்பெண்கள் இதோ...
வடலூர், திருவண்ணாமலை யிலிருந்து புறப்பட்ட 400 கிலோ மீட்டர் நடைபயணக்குழுக்கள் காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங்களை வந்தடைந்தன. வடலூரில் இருந்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலைமையில் சென்னைக் கோட்டையை நோக்கி புறப்பட்ட பிரச்சார நடைப்பயணக் குழு ஞாயி றன்று செங்கல்பட்டு மாவட்டத்தை வந்தடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையிலும் கன மழையைப் பொருட்படுத்தாமல் பயணக்குழுவில் பங்கேற்றுள்ள புது மைப் பெண்கள் உற்சாகத்துடன் நடை ப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
தடை அதை உடை....
.டிசம்பர் 1 ஞாயிறன்று 7வது நாளாக அச்சிறுப்பாக்கத்தில் துவங்கிய நடைபயணக்குழுவுக்கு மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், ஊனமலை, பாக்கம், ஒழுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர், மாதர், மாணவர், மாற்றுத்திறனாளிகள், முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் சார்பில் திருச்சி-சென்னை செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விடாமல் மழை பெய்தபோதும் குடை பிடித்துக்கொண்டு நடைபயணத்தை தொடர்ந்தது கிராம மக்களை மட்டுமின்றி பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் மன தையும் வென்றது. மதுராந்தகம் நகரத்தில் கொட்டும் மழையிலும் கோரிக்கை முழக்கத் துடன் நடைப்பயணத்தை மேற்  கொண்டுள்ள மாதர் சங்கத்தினருக்கு வழியெங்கிலும் பொதுமக்கள் ஆதரவு அளித்தனர். முன்னதாக, பாக்கம் கிராமத் தில் அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல  சங்கத்தின் சார்பில் மலர்தூவி வர வேற்றனர். மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன், துணைத் தலைவர்கள் ப.சு.பாரதி அண்ணா, சண்முகம், மாரியப்பன், ஜீவா மகேந்திரன் வழக்கறிஞர் சாமிநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு கொடுத்தனர். ஒழுப்பாக்கம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தீபா தலை மையில் பயணக்குழுவை வர வேற்று சங்கு மாலை அணிவித்தனர்.  மதுராந்தகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் வாண வேடிக்கை, மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலைக்குழு சார்பாக கலை நிகழ்ச்சி களுடன் வரவேற்பு கொடுத்தனர். பின்னர், நகராட்சி அலுவலகம் அருகில் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைவர்கள் உரையாற்றினர்
வெண்கொடி அணி வகுப்பு
திருவண்ணாமலையில் இருந்து  மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா தலைமையிலான பயணக்குழு கொட்டும் மழையிலும் சனிக்கிழமை இரவு காஞ்சிபுரத்திற்கு வந்தடைந்த னர். டிசம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்கு காஞ்சி புரம் நகரம் கங்கை கொண்டான் மண்டபத்திலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணி வித்து 7வது நாள் பிரச்சாரத்தை துவக்கினர். காஞ்சி நகர வீதிகளில் அணி வகுத்த பயணக்குழுவுக்கு ஆங்காங்கே உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வங்கி ஊழியர் சங்கத் தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
உங்களால் மட்டுமே முடியும்....
காஞ்சிபுரம் நகர தெருக்களில் தேங்கிய மழை நீரானது கழிவு நீரில் கலந்து சென்ற சாலையில் நடந்து சென்றபோது பயணக்குழு வினரிடம்“ இந்த அவலங்களை தீர்க்க நீங்கள்தான் போராடுகிறீர்கள்” என நகர மக்கள் வாழ்த்தினர் சு.வெங்கடேசன் எம்.பி., நேரில் வாழ்த்து பிள்ளையார் பாளையம் மூன்றாம் திருவிழா மண்டபம் அருகே இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைக் தொடர்ந்து, ஆலடி தோப்பு பகுதியில் சிறப்பான கொடுத்த னர். அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பய ணக்குழுவை வாழ்த்திப் பேசினார். அப்போது, போதையில்லா தமிழ கம் உருவாகவும், பாலியல் வன்கொடுமைகளை தடுக்காத அரசைக் கண்டித்தும், வன்முறை யற்ற மாநிலமாக தமிழகம் திகழவும் 400 கிலோ மீட்டருக்கு கடும் மழை யிலும் வெயிலிலும், சேற்றிலும், சகதி யிலும் தங்களை வருத்திக்கொண்டு சமூக மாற்றத்திற்காக களமிறங்கி யுள்ள மாதர் சங்கத் தோழர்களை மனதாரப் பாராட்டுகிறேன்” என்றார்.

செய்தி, படங்கள்: பார்த்திபன், இராமநாதன்