tamilnadu

img

காற்றின்மூலம் கொரோனா பரவலாம் - உலக சுகாதார அமைப்பு

காற்றின் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை தும்மல் இருமல், தொடுதல், மட்டுமே கொரோனா பரவ காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.  இந்நிலையில் காற்றின் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று அறிவிக்க வேண்டும்  என்று உலகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தினர். இந்நிலையில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்  தொழில் நுட்ப பிரிவுத் தலைவர் பெனெடெட்டா அலெக்ரான்ஸி கூறியதாவது: 
காற்றில் மிதக்கும் துகள்கள் மூலம் கொரோனா நோய் தொற்று மனிதர்களிடே பரவ வாய்ப்புள்ளது என்ற சான்றுகள் கிடைத்து வருகின்றன. ஆனால் கூட்டம் நிறைந்த மூடப்பட்ட காற்றோட்டமில்லாத இடங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அங்கு காற்றின் மூலம் கொரோனா தொற்று பரவுவதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதற்கான தகவல்களை தொடர்ந்து சேகரித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட பிறகுதான்  உறுதியான முடிவுக்கு வர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.