tamilnadu

img

இந்நாள் செப்டம்பர் 21 இதற்கு முன்னால்

1451 - யூதர்கள் அனைவரும், தாங்கள் யூதர்கள் என்பதைக் குறிக்கும் வில்லையை அணிந்திருப்பதைக் கட்டாய மாக்கி, புனித ரோமப் பேரர சில், ப்ரிக்சென் பகுதியின் பிரின்ஸ்-பிஷப் ஆக இருந்த கியூசாவின் நிக்கோலஸ் உத்தரவிட்டார். ப்ரிக்சென் என்பது தற்போதைய இத்தாலியிலுள்ள ஒரு பகுதி. பிரின்ஸ்-பிஷப் என்பது, ஆட்சியதிகாரம் மதத் தலைமை யிடமிருந்த நிலையில், திருத்தந்தையின்(போப்) பிரதிநிதி யாக, குறுநில ஆட்சியதிகாரம் கொண்ட பதவி. இத்த கைய யூத எதிர்ப்புணர்வின் வரலாறு மிகப் பண்டைய காலத்திலேயே தொடங்கிவிடுகிறது. நைல் நதியின் எலிஃபண்ட்டைன் தீவில் யூதர்களின் ஆலயம் கி.மு.410இலேயே அழிக்கப்பட்டுள்ளது. பல ஹெலனிய ஆட்சியாளர்கள், யூத ஆலயங்கள், மதப் பழக்கங்கள் முதலானவற்றைத் தடை செய்ததும், யூத எதிர்ப்புக் கலகங்களும், கி.மு.3ஆம் நூற்றாண்டுவாக்கில் நடைபெற்றிருக்கின்றன.

யூதர்களுக்கெதிரான (வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட) முதல் உத்தரவாக, செல்யூகஸ் நிக்கேடாரால் நிறுவப்பட்ட செல்யூசிட் பேரரசில், கி.மு.170வாக்கிலேயே நான்காம் அண்டியோக்கஸ் பேரரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறிப்பிடப்படுகிறது. அன்றிலிருந்து, ஹிட்லரால்  செய்யப்பட்ட இனப்படுகொலைவரை தொடர்ந்த யூத எதிர்ப்பு, யூத தனி மனிதர்களிடம் காட்டப்படும் வெறுப்பிலிருந்து, யூத சமூகத்தையே குழுக்களாகத் தாக்குதல், அரசே காவல்துறை, ராணுவம் ஆகியவற்றைக்கொண்டு தாக்குதல் என்று தொடர்ந்தது. யூதர்களின் மாறுபட்ட மத நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு எதிராகவும், தவறான கருதுகோள்களின் காரணமாகவும் தொடங்கிய யூத எதிர்ப்பு என்பது, வெறும் மத எதிர்ப்பாக இன்றி, இன எதிர்ப்பாகவும், அரசியல் நிலைப்பாடாகவும் வெளிப் பட்டது.

வரலாறு முழுவதும் காணப்படும் யூத எதிர்ப்பு  செயல்பாடுகளைக் குறிக்கப்பயன்படுத்தும் ஆண்ட்டி- செமிட்டிசம் என்ற சொல், 1860இல்தான் புழக்கத்துக்கு  வந்தது. ஆஸ்திரிய யூதரான மோரிட்ஸ் ஸ்டெயின்ஷ்னெய்டர் என்பவர்தான் இச்சொல்லை முதன்முதலில் உருவாக்கிப் பயன்படுத்தினார். உண்மையில் செமிட்டிக் மக்கள் என்பது அரேபியர் களையும், அஸ்ஸிரியர்களையும் குறித்தாலும், செமிட் என்ற சொல்லிலிருந்து உருவான ஆண்ட்டிசெமிட்டிக் என்பது யூத எதிர்ப்புணர்வைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வளவு வெறுக்கப்பட்டாலும், உலகின் மக்கள் தொகையில் வெறும் 0.2 சதவீதமாக உள்ள யூதர்கள், மனிதகுல முன்னேற்றத்துகான கண்டுபிடிப்புகளில் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரும் பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள் என்பது கவனிக்கவேண்டிய முரண்.  இதுவரை வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசுகளில் 20 சதவீத த்தை யூதர்களோ, யூதப் பின்னணி கொண்டவர்களோ பெற்றிருக்கிறார்கள் என்பதும் தவறாமல் குறிப்பிடத்தக்கது. - அறிவுக்கடல்