tamilnadu

img

எரிவாயு கிடங்கு வெடி விபத்தில் சிக்கி 10 பேர் பலி


சீனாவில் எரிவாயு கிடங்கு வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் வெள்ளியன்று பிற்பகல் எரிவாயு கிடங்கில்  எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிடங்கில் இருந்த பொருட்கள் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வெடி விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.