tamilnadu

img

சி.பி. ஜெயராமன் பணி நிறைவு பாராட்டு

கிருஷ்ணகிரி, மே 4-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான சி.பி. ஜெயராமன், கடந்து 29 ஆண்டுகள் பட்டு வளர்ச்சித் துறையில் பணியாற்றி துணை ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்றுக் கடந்த மாதம் 30 ஆம் தேதி பணி நிறைவு பெற்றார்.மதுரை மாவட்டத்தில் பிறந்து 29 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்செட்டி மலைப் பகுதியில் கோலட்டியில் பட்டு வளர்ச்சித் துறை ஊழியராக பணியைத் துவங்கியவர் சி.பி. ஜெயராமன். கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக அரசுப் பணியுடன் தொழிற் சங்கப் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுப் பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தை உருவாக்கினார். அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர், ஜாக் டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். அரசு ஊழியர் சங்கப் பணியே முழு மூச்சாகச் செயல்பட்டு 16 நாட்கள் சிறையிலிருந்துள்ளார். 33 நாட்கள் தொழிற்சங்க பணிகளுக்காகச் சம்பள இழப்பைச் சந்தித்துள்ளார்.சமரசமற்ற கடும் போராட்டங்கள் காரணமாக அரசு ஊழியர் சங்கத்திற்கும், பட்டு வளர்ச்சித் துறை ஊழியர்களையும், இத்துறையையும் பாதுகாத்திடவும், சங்கப் பணிகளில் முன் நின்றிட 60க்கும் மேற்பட்ட தலைவர்களைக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உருவாக்கியுள்ளார். இவரது பணி மாபெரும் பணியாகும். இதற்காக அவருக்கும், முகம் கோணாமல் ஒத்துழைப்பு நல்கிய அவரது துணைவியாரையும் இந்த விழாவில் தலைவர்கள் பாராட்டினர்.

இந்த பாராட்டு விழா என்பதே ஜெயராமனைப் போல மேலும் பலர் போராட்ட குணம் மிக்க தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற அவசியத் தேவையை உணர்த்துவதற்காகவே எனவும் தலைவர்கள் தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பணி நிறைவு பெற்ற தோழர் சி.பி.ஜெயராமனுக்குப் பாராட்டு விழாவும், அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும் ஓசூர் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் நடராஜன் வரவேற்றார். மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார். வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன், கூட்டுறவு ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன், மாநில, மாவட்ட துறைவாரி சங்க நிர்வாகிகளும் வாழ்த்திப் பேசினர்.சி.பி. ஜெயராமன் எழுதிய ‘இருந்தும்.. இல் லாமலும்’கவிதைத் தொகுப்பை மாநில பொதுச் செயலாளர் அன்பரசு வெளியிடத் தீக் கதிர் சென்னைப் பதிப்பு முன்னாள் ஆசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம் பெற்றுக் கொண்டார்.கவிஞர் ரசூல் வாழ்ந்தாயா? என்று கேட்டது போலச் சங்கத்திற்காகவும், ஊழியர்களுக்காகவும் தொடர்ந்து 28 ஆண்டுகள் உழைத்ததன் பலனை, இங்கே வந்திருப்பவர்களின் முகங்கள் மூலம் தெரிந்து கொண்டோம்.  மாவட்ட துணைத் தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.