tamilnadu

img

சாத்தூர் நகராட்சியில் அனைத்து குடும்பங்களுக்கும் ஹோமியோ மருந்து

சாத்தூர்:
சாத்தூரில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் இந்திய இயற்கை மருந்துக் கவுன்சில், தீபம் மாற்றுமுறை மருத்துவமனை சார்பில் கொரோனா தடுப்புக்கான நோய் எதிர்ப்புசக்தி மருந்து ஆர்சனிகம் ஆல்பம் 30 வழங்கும் நிகழ்ச்சி ஜூன் 29 அன்று நடைபெற்றது. சாத்தூர்சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், தலைமையேற்று உரையாற்றினார்.

ஐஎன்டிசி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வி.ஏ.விஸ்வநாத், இச்சேவையைப் பாராட்டிப் பேசினார். ஐஎன்டிசி அமைப்பின் ஹோமியோபதி நிபுணர்கள் குழு தயாரித்து அளித்த ஆர்சனிகம் ஆல்பம் 30 பற்றியும், ஹோமியோபதிசிறப்புகள் பற்றியும், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றியும்ஐஎன்டிசி சேர்மன் மரு.எஸ் வெங்கடாசலம் விளக்க உரையாற்றினார்.நகருக்குள் வசிக்கும் சுமார் 10,000 குடும்பங்களுக்கு (சுமார் 40,000 பொதுமக்களுக்கு)த் தேவையான ஆர்சனிகம் ஆல்பம் 30 ஐஎன்டிசி சார்பில் நகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மட்டுமின்றி, வீடு வீடாகவும் சென்று சட்டமன்ற உறுப்பினர் ஆர்சனிகம் ஆல்பம் 30 மருந்தினை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இத்துவக்க நிகழ்வைத் தொடர்ந்து, நகராட்சி பணியாளர்கள் சுமார் 50 பேர்கள் கொண்ட குழுவினர், நகரின் அனைத்து வார்டுகளிலும், அனைத்துத் தெருக்களிலும் ஆர்சனிகம் ஆல்பம் 30 மருந்தினை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர், சுகாதார அலுவலர், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

;