tamilnadu

டோல்கேட் ஊழியர்களுக்கு சிஐடியுவால் மீண்டும் கிடைத்த பணி...

சாத்தூர்:
சாத்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு கடந்த 9 ஆண்டுகளாக 66 பேர் வேலை செய்து வருகின்றனர். அனைவரும் சிஐடியு உறுப்பினர். சுங்கச்சாவடியில் வசூல் செய்யும் உரிமையை க்யூப் என்ற நிறுவனம் எடுத்துள்ளது.

அதனிடமிருந்து டி.பி.ஆர். என்ற நிறுவனம் சப்-கான்ட்ராக்ட் எடுத்துள்ளது. டிபிஆர் நிர்வாகம் 10 ஆம் வகுப்புக்கு கீழே படித்த ஊழியர்கள் 24 பேரை பணிநீக்கம் செய்தது. இதையடுத்து  ஊழியர்கள் வேலைநிறுத்ததத்தில் ஈடுபட்டனர். தகவறிந்த நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் அனைத்து ஊழியர்களையும் பணியில் சேர்த்துக் கொள்வதாக உறுதியளித்தனர். போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்பினர். பேச்சுவார்த்தையில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.திருமலை, வட்டாரத் தலைவர் கே.விஜயகுமார்,  வழக்கறிஞர் விஸ்வநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.