tamilnadu

img

‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ உறுதிமொழியேற்பு

‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ உறுதிமொழியேற்பு

சேலம், ஆக.11- சேலத்தில் திங்களன்று நடை பெற்ற ‘போதைப்பொருள் இல் லாத தமிழ்நாடு’ உறுதிமொழி யேற்பு நிகழ்ச்சியில், 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ‘போதைப்பொருட்கள் இல் லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை தமிழக துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் திங்களன்று துவங்கி வைத்தார். அதன்படி, சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் சுற்று லாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்தி ரன், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி, மாநகராட்சி மேயர் ஆ.ராமச் சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்ட சேலம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, ஹோலி கிராஸ் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளி, உடையாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கும், சேலம் - 7 அரசு கலைக்கல்லூரி, விநாயகா மிஷன் பல் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி, வடுகப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, கன்னங்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளி, எருமாபாளையம் குளுனிவித்யா நிகேதன் மேல்நி லைப்பள்ளி, சிஎஸ்ஐ பாலிடெக் னிக் கல்லூரி ஆகிய பள்ளி, கல்லூரி களை பாராட்டி அமைச்சர் ராஜேந்தி ரன் சான்றிதழ்கள் மற்றும் கேடயங் களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மா.சாரதாதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ரவிக்குமார், மண்ட லக்குழு தலைவர் உமாராணி, உதவி ஆணையர் (கலால்) அ.ஜெ. செந்தில் அரசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.கபீர், இணை இயக்குநர் (மருத்துவம்) எஸ்.பி. நந்தினி மற்றும் 1,800க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.