பேருந்துப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்
நாமக்கல், ஆக.26- பரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில், இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளை ஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காமராஜர் பேருந்து நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் அதிக ளவில் பேருந்துக்காக காத்திருந்தனர். அப் போது, இளைஞர்கள் சிலர் பேருந்து நிலை யத்திற்குள்ளேயே, பொதுமக்கள் மற்றும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்தனர். அப் போது, எதேச்சையாக வந்த பெண் ஒரு வர் தனது குழந்தையை வேகமாக பிடித்துக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி யது. மேலும், சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தது மற் றும் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊட கங்களில் வைரலாகியுள்ளது. பொதுமக் களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட இளைஞர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.