tamilnadu

img

வாலிபர் சங்க தோழர் ஆணவப்படுகொலை: மறியல் - கைது

வாலிபர் சங்க தோழர் ஆணவப்படுகொலை: மறியல்  - கைது

தருமபுரி, செப்.17- வாலிபர் சங்க தோழர் ஆணவப்படு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவராக வைரமுத்து என்பவர் செய லாற்றி வந்தார். இவரும், அதேப்பகுதி யைச் சேர்ந்த பெண்ணும் 10 ஆண்டுக ளாக காதலிந்து வந்தனர். இவர்களின் திருமணத்திற்கு பெண்ணின் தயார் மற்றும் அவரது சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், கொலை மிரட்டல் விடுத் தும் வந்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தபோதும், கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால், அந்தப்பெண் தனது காதலில் உறுதி யாக இருந்த நிலையில், அவரது சகோதரர்கள் வைரமுத்துவை கொடூர மாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த ஆணப்படுகொலையைக் கண் டித்தும், படுகொலைக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது  செய்ய வேண்டும். சாதி ஆணவக்கொ லைகளை தடுக்க சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புத னன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா ளர் ஏ.சேகர் தலைமை வகித்தார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எம்.முத்து, பொரு ளாளர் வழக்கறிஞர் டி.மாதையன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ம.குற ளரசன், செயலாளர் பி.கோவிந்தசாமி, துணைச்செயலாளர் ரவி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 30 பேரை காவல்துறையினர் கைது செய் தனர். இப்போராட்டத்திற்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் ந.ராஜா தலைமை வகித்தார். இதில், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் தினேஷ்ராஜா, பொருளாளர் அர் ஜூன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கு. பாவெல், செயலாளர் அக மது ஜூல்ஃபிகர் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்று கைதாகினர். நீலகிரி நீலகிரி மாவட்டம், பந்தலூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஏரியா செயலாளர் பெரியார் மணிகண்டன் தலைமை ஏற்றார். இதில், இராசி.ரவிக்குமார், பி.ரமேஷ், ஹைசைன் ஆகியோர் உரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க  நிர்வாகிகள் செரிப், ரெஜிதா மணிகண் டன், சதீஸ், பாப்புட்டி, ரெபீக் உள்ளிட்ட திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். இதேபோன்று, கோத்தகிரி மார்க்கெட் திடல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, வாலிபர் சங்க தாலுகா செய லாளர் கனிவாளன் தலைமை வகித்தார்.  இதில் மாவட்டத் தலைவர் வி.மணி கண்டன், தாலுகா தலைவர் பூவரசன், ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் செல்வம், அனைத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகி சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு, சூரம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாவட்ட துணைத்தலைவர் வி.சுரேஷ் பாபு தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன், நகரச்  செயலாளர் வி.பாண்டியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா ளர் ஏ.கே.பழனிசாமி, நிர்வாகிகள் சுந் தர், வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.