tamilnadu

img

தேசிய நெடுஞ்சாலையில் மதுபானக் கடைகள் வாலிபர் சங்கம் புகார்

தேசிய நெடுஞ்சாலையில் மதுபானக் கடைகள் வாலிபர் சங்கம் புகார்

சேலம், ஜூலை 28 – நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என  சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். திங்களன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் வாலிபர் சங்கத்தினர்  அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாநகரம் சில நாயக்கன்பட்டி ரவுண்டானாவில், டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படுகிறது. நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இந்த கடை  செயல்படுகிறது. இதனை அகற்ற வேண்டும் என பலமுறை  புகார் தெரிவித்தும் அகற்றப்படவில்லை. மது அருந்த வருவோருக்குள் ஏற்படும் சச்சரவால் அதிக போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படு கிறது. சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள இரண்டு அரசு  மதுபான கடைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அப்பு றப்படுத்த வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் தெரிவித்துள்ளனர்.  மனு கொடுக்கும் இயக்கத்தில், வாலிபர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் வி. பெரியசாமி, கிழக்கு மாநகர தலைவர்  பிரபாகர், செயலாளர் விமல் குமார், துணைத் தலைவர் தமிழ்,  துணைச் செயலாளர் வீரமணி சதீஸ் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.