tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் வாலிபர் கைது  

தருமபுரி, ஆக.27- 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பேதா தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (26). இவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தைக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் கர்ப்பமடைந்த சிறுமி, அஜித் குமாரிடம் கூறவே இருவரும் கோவிலுக்கு சென்று திரு மணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்ப மடைந்தது தெரியவந்ததால், மருத்துவமனை நிர் வாகம் அளித்த புகாரின் பேரில் அரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் அஜித்குமார் மீது போக்சோ சட்டத் தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

கிணற்றிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

சேலம், ஆக.27- எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றிலிருந்து தொழி லாளியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட முண்டாச்சியூர், காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (48). கூலித் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான ராமசந்திரன் அடிக் கடி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக் கூறப்படு கிறது. இந்நிலையில் புதனன்று மாக்கனூர் கிராமம், எலந்ததோப்பு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவ ரது விவசாயக் கிணற்றில் ராமச்சந்திரன் சடலம் மிதப்ப தாக பூலாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த போலீசார், ராமச்சந்திரனின் உடலை மீட்டு எடப் பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரன் மது  போதையில் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந் தாரா? அல்லது முன் பகையால் அவரை யாரேனும் அடித்து கிணற்றில் வீசினார்களா? உள்ளிட்ட கோணங் களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் சிகிச்சை பெற மறுத்து போதையில் ரகளை

தருமபுரி, ஆக.27- விபத்தில் சிக்கி படுகாயமடைந்த லாரி ஓட்டுநர், மது போதையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் காவல்  துறையினரிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த அரகாசனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். லாரி ஓட்டுநரான இவர் செவ்வாயன்று இரவு மது போதையில் அரகாசன அள்ளியில் இருந்து நாகாவதி அணை செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற வர், வழி மாறி இண்டூர் சாலையில் சென்றுள்ளார். அப்போது மேடு, பள்ளமாக இருந்த அந்த சாலையில் சென்ற சரவணன் நிலைத்தடுமாறி வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார். இதையடுத்து அவ் வழியாகச் சென்ற பொதுமக்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவலளித்தனர். அதன்பேரில் சென்ற  ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அவரை மீட்க சென்ற போது ரக ளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து சமாதானப்படுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற மாட்டேன் எனக்கூறிய சரவணன், ரத்தம் ஒழுகும் நிலை யிலும் ரகளையில் ஈடுபட்டார். அங்கிருந்த சரவ ணன் உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் சமாதா னத்தில் ஈடுபட்டபோது, ஒரு கட்டத்தில் தகாத வார்த்தை களால் பேசியுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதியின்றி மரங்களை வெட்டிய நபர் கைது

தருமபுரி, ஆக.24- பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்த மரங்களை அனுமதி யின்றி வெட்டி விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 10  ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது. இதில் சுற்றுச்சுவரை ஒட்டி உள்புற மாக நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் உள் ளன. பல்வேறு வகையான மரங்கள், நிழல் பரப்பி பூங்காவைப் போல் பசுமையாக காட்சி யளிக்கிறது. இதில் அதிகாலை நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பள்ளி மைதா னத்தில் இளைஞர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்வதும், மூத்த குடிமக்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொது மக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில், ஆக.22 ஆம் தேதி யன்று பள்ளி மைதானத்தில் நன்றாக வளர்ந்த பச்சை மரங்கள் அடியோடு வெட்டப்பட்ட தைக் கண்டு, பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்தனர். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழிலில் ஆக.25 ஆம் தேதியன்று விரிவான செய்தி வெளியானது. மேலும், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளி தலைமை யாசிரியர் தமிழ்வாணன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீ சார், அனுமதியின்றி பள்ளி வளாகத்திலி ருந்த மரங்களை வெட்டிய ஆச்சாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (31) என்பரை செவ்வாயன்று கைது செய்தனர்.

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிருக்கு போராடும் பள்ளி மாணவி

தருமபுரி, ஆக.27- விளையாட்டில் மாணவிக்கு ஏற்பட்ட காயத்திற்கு சரியான சிகிச்சை அளிக்காத தால், தற்போது அவர் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் தரும புரியில் நிகழ்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த நாகாவதி அணை, எரப்பட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. லாரி ஓட்டு நரான இவருக்கு ஒரு மகன், மகள் உள்ள னர். இதில் மகள் இனியா (15) ஏரப்பட்டி  கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி யில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆக.15 ஆம் தேதி யன்று முதல்வர் கோப்பைக்காக நடந்த கபடி விளையாட்டு பயிற்சி போட்டியில் இனியா பங்கேற்றுள்ளார். பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால், வெறும் கற்கள் பதிந்த தரையில் விளையாடிய போது, மாணவி கீழே விழுந்ததில் இடது கையில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கா மல் பெற்றோரிடம் தகவலை தெரிவித்து பள்ளி நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து, ஒருநாள் கழித்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் மாணவி சிகிச்சைக்காக சென்றபோது, முதலுதவி மட்டும் செய்துவிட்டு உள்ளி ருப்பு நோயாளியாக அனுமதித்து, வெறும் மருந்து மாத்திரை மட்டும் கொடுத்து வந் துள்ளனர். இந்நிலையில், கை முழுவதும் பாதி அழுகிய நிலையில் மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுத் துள்ளார். அப்போது அருகிலிருந்த நோயா ளிகளின் உறவினர்கள் அவரை மீட்டுள்ள னர்.  இதன்பின் மருத்துவர்கள் வந்து சிகிச்சை  அளித்தபோது, மாணவியின் ஆபத்தான நிலையை கண்டு, அழுகிய நிலையில் இருந்த இடது கையில் அறுவை சிகிச்சை செய்து  கட்டுப் போட்டுள்ளனர். இதன்பின் மருத்து வர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படு கிறது. தற்போது மாணவி உயிருக்கு ஆபத் தான நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இதுகுறித்து இனியாவின் தந்தை கூறு கையில், எனது மனைவி இறந்து 7 வருடங்க ளுக்கு மேலாகிறது. நாங்கள் ஏழைகள் என்ப தால் அரசு மருத்துவமனையை நம்பி தான்  உள்ளோம். ஆனால், அரசு மருத்துவர்களின் அஜாக்கிரதையால் என் மகள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார், என மனவேதனையோடு தெரிவித்தார்.