tamilnadu

img

திருமணமான இளம் பெண் மரணம் உடலை வாங்க மறுத்து போராட்டம்

திருமணமான இளம் பெண் மரணம் உடலை வாங்க மறுத்து போராட்டம்

தருமபுரி, செப். 8- தருமபுரி மாவட்டத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளம் பெண் ஸ்ரீபிரியா சந்தேகத்திற் குரிய முறையில் இறந்த தால், அவரது உறவினர்கள்  உடலை வாங்க மறுத்து தரும புரி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை முன்பு  போராட்டம் நடத்தினர். வரதட்சணை கொடுமையால் ஸ்ரீபிரியா கொலை செய்யப் பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்த பரத், பொம்மிடி அருகேயுள்ள தாசர ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா இரு வரும் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை யும் மீறி 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண்  குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு குழந்தை  மூன்று மாதங்களிலேயே உடல்நலக்குறை வால் இறந்துவிட்டது. இரண்டாவது குழந்தை பிறந்த நிலை யில், பரத்தின் குடும்பத்தினர் ஸ்ரீபிரியாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற் பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி,  பரத் ஸ்ரீபிரியாவைத் தாக்கியுள்ளார். அதன் பின் செப்டம்பர் 6ஆம் தேதி, ஸ்ரீபிரியா காணா மல் போனதாக பரத் குடும்பத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், தருமபுரி நகரப் பகுதியில் உள்ள  ராமக்காள் ஏரியில் ஸ்ரீபிரியாவின் உடல்  மீட்கப்பட்டது. தங்கள் மகளை வரதட்சணை  கொடுமை செய்து கொலை செய்துவிட்டு, ஏரி யில் வீசிவிட்டதாக ஸ்ரீபிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டினர். உடனடியாக பரத் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தருமபுரி கோட் டாட்சியர் காயத்ரி விசாரணை மேற்கொண்டு  வருகிறார். காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் வரதட்சணை கொடுமை யால் இறந்தது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.