tamilnadu

img

உலக திருநங்கைகள் தினம் முன்னெடுப்பு 

கோவை, மார்ச் 31- உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக் கான கலை நிகழ்ச்சிகள் வியாழனன்று நடைபெற்றன. மார்ச் 31 உலக திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் கோவை மாவட்ட திருநங்கை களுக்கான கலை நிகழ்ச்சிகள் (நடனம், கோலம், பேச்சுப்போட்டி, ஆடை அலங் கார அணிவகுப்பு, பாட்டு போட்டி) நடை பெற்றன. மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கலந்து  கொண்ட 10க்கும் மேற்பட்ட திருநங்கை கள் பாரம்பரிய ஆடை அணிந்து அணி வகுப்பும், நடனமும் நடத்தினர். இதில், “திருநங்கைகளை வாழவிடு” என்ற  தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற் பட்ட திருநங்கைகள் கலந்து கொண்ட னர். முன்னதாக, திருநங்கைகள் தங்க ளது கோரிக்கைகளை அலுவலர்களி டம் முன்வைத்தனர். குறிப்பாக, அரசு திட்டங்கள் தங்களுக்கு கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அதிகாரி களிடம் தெரிவித்தனர்.

;