கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி துவக்கம்
ஈரோடு, அக்.4- சென்னிமலை அருகே கொடி காத்த குமரனுக்கு ரூ.2.50 கோடியில் மணி மண்டபம் கட்டும் பணிக்கு அமைச்சர் கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சனியன்று அடிக்கல் நாட்டி னர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட் டம், சென்னிமலை, அட்டவணைப் பிடா ரியூர், மேலப்பாளையம் பகுதியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தியாகி கொடிகாத்த குமரனுக்கு திரு வுருவச் சிலையுடன் கூடிய மணிமண்ட பம் அமைக்கும் பணிக்கு சனியன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்து சாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்த னர். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பேசு கையில், சுதந்திரப் போராட்ட வீரர் திருப் பூர் குமரன், சென்னிமலையில் 1904 ஆம் ஆண்டு அக்.4 ஆம் தேதியன்று பிறந் தார். இளம் வயது முதலே காந்தியடி களின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக் காக காந்தியடிகள் அறிவித்த போராட் டங்களில் எல்லாம் தன்னை ஈடுபடுத் திக்கொண்டார். திருப்பூரில் போலீசா ரின் தடையை மீறி 10.01.1932 ஆம் தேதி தியாகி பி.எஸ்.சுந்தரம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் முதல் வரிசையில் கொடியைப் பிடித் துக் கொண்டு குமரன் வந்தார். வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முழங்கிய போது காவலர்களின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலால் உட லிலும், தலையிலும் பலத்த காயமேற் டது. அப்போதும் தன் கையிலிருந்த கொடியை தரையில் சாய விடாமல் வந்தே மாதரம் என்ற முழக்கத்தை எழுப்பி தன் நாட்டுப் பற்றினை பறை சாற்றினார். குமரன் கீழே விழுந்தாலும் அவர் கையில் ஏந்தியிருந்த கொடி தரை யில் விழாமல் பிடித்திருந்தார். திருப்பூர் வீதியிலே கொடிகாக்க குருதி வெள்ளத் தில் வீழ்ந்த குமரன், பலத்த காயங்களு டன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது, சுயராஜ்யம் வராதா என்ற இறுதிச் சொற்களுடன் 11.01.1932 ஆம் தேதி இம்மண்ணுலகை விட்டு சென்றார். அவரின் நினைவாக தமிழ்நாடு அரசு, செய்தி மக்கள் தொடர்புத்துறை யின் சார்பில் கொடிகாத்த குமரன் பிறந்த பகுதியான சென்னிமலை, மேலப் பாளையம் பகுதியில் திருவுரு வச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்திட ஆணையிடப்பட்டு, அதற் கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தின் கட்டிடப் பரப்ப ளவு 2109.73 சதுரடி ஆகும். மணிமண்ட பத்தை சுற்றி சுற்றுச்சுவர், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, நிலத்தடி நீர்தேகக் தொட்டி, காவலர் அறை, பேவர் கற்கள், ஆண்கள், பெண் கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக் கான கழிவறைகள் ஆகிய வசதிகளு டன் அமைக்கப்படவுள்ளது, என்றனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ச.கந்த சாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பி னர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் அ.சுகுமார், உதவி அலுவலர் செ. கலைமாமணி மற்றும் கொடிகாத்த குமர னின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்ட னர்.
