காட்டுயானை தாக்கி பெண் படுகாயம்
கோவை, ஜூலை 24- நரசிபுரம் அருகே காட்டுயானை தாக்கியதில் படுகாயம டைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், நரசிபுரத்தை அடுத்த விராலியூர், இந் திரா காலனியை சேர்ந்தவர் ஜெயபாலன் மனைவி ரத்தினா (51). இவர் வியாழனன்று காலைக்கடனை கழிக்க வெளியே சென்றபோது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சத்தம் போடவே, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து கூச்சலிட்டனர். மேலும், வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அதன் பேரில் வந்த வனத்துறையினர் காட்டுயானையை வனப்பகு திக்குள் விரட்டினர். மேலும், படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ரத்தினாவை மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், ரத்தினாவின் உடல்நிலை குறித்து போளுவாம் பட்டி வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் நேரில் சென்று மருத்துவரிடம் கேட்டறிந்தார்.