tamilnadu

img

ஜக்கியை காப்பாற்றுகிறதா கோவை காவல்துறை?

ஈஷா ஜக்கி வாசுதேவை தனது கணவர் என்று கூறிய கர்நாடக பெண்ணை, கோவை காவல் துறையினர் சத்தமில்லாமல் அவரது பெற்றோரிடம் அப்பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் இருட்டுப்பள்ளம் வனச்சரக அலுவலகம் அருகே, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஜக்கி வாசுதேவ் தனது கணவர் என்றும், அவரை வரச்சொல்லுங்கள் என்றும் அங்கிருந்த மக்களிடம் கூறியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை காவல் துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பெயர் ஸ்ருதி என்பதும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், ஜக்கி வாசுதேவ் தனது கணவர் என்றும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து  பெற்றோர் விவரங்களை பெற்ற போலீசார், அப்பெண்ணை ஆர் எஸ் புரம் பெண்கள் காப்பகத்திற்கு அழைத்துச்சென்று தங்கவைத்துள்ளனர். வெள்ளி இரவு முதல் இன்று மதியம் வரை ஸ்ருதி தங்கியிருந்த பெண்கள் காப்பகத்திற்கு, வெளியே 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.   

ஸ்ருதியின் பெற்றோரை கோவைக்கு வரவழைத்த காவல் துறையினர், அவரை சத்தமில்லாமல் அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். கோவை காவல் துறையினரின் இந்த செயல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

;