கிடப்பில் போடப்பட்ட பாலக்கோடு உபரிநீர் கால்வாய் திட்டம் நிறைவேற்றுவது எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு
தருமபுரி, ஆக.28- பாலக்கோடு அருகே புலிகரை ஏரி உட்பட 14 ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லும் கால்வாய் திட்டப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, எர்ரனஅள்ளியில் - ஜெர்த்த லாவ் கால்வாய் திட்டம், 5 கிலோ மீட்ட ரிலிருந்து புதிய கால்வாய் அமைத்து எர்ரனஅள்ளி ஏரி, புலிகரை ஏரி உட் பட 14 ஏரிகளுக்கு, சின்னாறு அணை யின் மழைக்கால வெள்ள உபரிநீர் வழங்கும் திட்டப்பணி துவங்கப்பட் டது. ரூ.30.38 கோடி மதிப்பீட்டில் தமி ழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 2022 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். நான்கு ஆண்டு கள் கடந்த நிலையில், 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள கால்வாய் இணைப்பை முழுமையாக முடிக்காமல் கால்வாய் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான ஏரிகளுக்கு கால்வாய் அமைக்கப்படாமல் நீர் கொண்டு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு ஆண்டு காலமாக பருவமழை பொழிந்து, சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் கடலில் கலந்தது. தற்போது வரை கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படா மல் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ள தால், இத்திட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு துய ரத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள், பழம் வகைகள், பூக்கள் சாகுப்படி, கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்டவை கடும் வறட்சியால் பெரும் பாதிப்படைந்து வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகி றது. விவசாயத்தை நம்பி வாழ்க் கையை நடத்திவரும் இவர்களுக்கு, கால்வாய் உபரிநீர் திட்டத்தை உடன டியாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப் பாக உள்ளது.