tamilnadu

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு

ஈரோடு, செப். 22- மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதி செய் வோம் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத் தியுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பெருந்துறை தாலுகா முதல் மாநாடு பெருந்துறை அண்ணா சிலை அரு கில் உள்ள டால்பின் ஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கமணி தலைமை வகித் தார். அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மாவட் டச் செயலாளர் ப.மாரிமுத்து ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்டப் பொருளாளர் வி.ராஜு, மாவட்ட உதவி  செயலாளர் எஸ்.ரேணுகா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசி னர். இதில், பெருந்துறை தாலுகா தலைவராக ராமசாமி, செய லாளராக கே.தங்கமணி, பொருளாளராக ஆர்.அர்ஜுனன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட தாலுகாக குழு தேர்வு செய்யப் பட்டது. பவானி இதேபோன்று, பவானி தாலுகா 5ஆவது மாநாடு காடை யாம்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. தாலுகா தலை வர் என்.சின்னுசாமி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளா ளர் வி.ராஜு தொடக்க உரையாற்றினார். மாவட்ட உதவி  செயலாளர் ரேணுகா மற்றும் சிபிஎம் தாலுகா செயலாளர்  ஆர்.பிரகாஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தலைவராக என். சின்னசாமி, செயலாளராக ஏ.ஜெகநாதன், பொருளாளராக மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக இம்மாநாடுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்கிட வேண்டும். ஆந்திராவைப் போல  உதவித்தொகை ரூ.15 ஆயிரமாக உயர்த்திட வேண்டும். சிறு  தொழில் வணிகக் கடன் வழங்க வேண்டும். பஸ், ரயில் பாஸ்  அருகாமையில் கிடைக்கச் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.