tamilnadu

img

16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சேலம், செப்.5- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளம் மாநி லத்தின் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதி களில் தொடர் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளது. அதன்படி, வெள்ளியன்று காலை நிலவரப்படி, 23,300 கனஅடி யாக இருந்த நீர்வரத்து, மாலையில் 30,800 கனஅடியாக உயர்ந்தது. அணை யின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளள வான 120 அடியில் 4 ஆவது நாளாக நீடிக்கிறது. அணைக்கான நீர்வரத்து,  அப்படியே உபரிநீராக டெல்டா பாசனத் திற்கும், கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரை யோர மக்கள் கவனமாக இருக்க வேண் டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்க மாபுரிபட்டினம், பெரியார் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாகவும், ஆற்றில் இறங் கவோ கூடாது என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.