tamilnadu

img

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

திருப்பூர்ம் செப்.19- உடுமலை அமராவதி அணையிலிருந்து, புதிய மற் றும் பழைய ஆயக்கட்டு பாச னத்தில் உள்ள, 47,117 ஏக்கர்  நிலங்களுக்கு வெள்ளி யன்று தண்ணீர் திறக்கப்பட் டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந் துள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரண மாக, கடந்த ஜூன் 16 ஆம் தேதி அணை நிரம்பி யது. இந்நிலையில், பழைய ஆயக்கட்டு பாச னம், அலங்கியம் முதல் கரூர் வரை ஆற்றின்  வலது கரை 10 கால்வாய்கள் வாயிலாக பாசன  வசதி பெறும், 21 ஆயிரத்து, 867 ஏக்கர் நிலங்க ளுக்கு நீர் திறக்க வேண்டும். அதே போல்,  புதிய ஆயக்கட்டு பாசனம், அமராவதி பிர தான கால்வாய் வாயிலாக பாசன வசதி  பெறும் 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்களுக் கும் நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள்  வலியுறுத்தி வந்தனர்.  அதன் அடிப்படையில்,  19ஆம் தேதி முதல், பிப்.,வரை, 134 நாட்க ளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில், சுழற்சி  முறையில் நீர் வழங்க அரசு அனுமதி அளித் தது. இதையடுத்து, வெள்ளியன்று அமரா வதி அணையில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி  செல்வராஜ் ஆகியோர் தண்ணீரை  திறந்து  விட்டனர். அமராவதி அணையில்  தற்போது, நீர்மட் டம் மொத்தமுள்ள, 90 அடியில், 88.57 அடியாக வும், நீர்வரத்து  வினாடிக்கு, 358 கன அடியாக வும் உள்ளது.