tamilnadu

img

திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் உயர்வு: ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் உயர்வு: ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை, அக்.24- திருமூர்த்தி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பெய்வாதலும், காண்டூர் கால் வாய் மூலம் தண்ணீர் வரத்தால் அணை யின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரு கிறது. இதனால் ஆற்றின் கரையோரப்  பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்ச ரிக்கையாக இருக்கும்படி பொதுப்ப ணித் துறை அலுவலர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகு தியில்  பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட  (பிஏபி) தொகுப்பு அணைகளில் ஒன் றான திருமூர்த்தி அணைக்கு பாலாறு  மற்றும் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண் ணீர் கொண்டு வரப்படுகிறது. இதன்  மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்க ளில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங் கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு  பாசன வசதி பெறுகிறது. மேலும், உடு மலை நகராட்சி, உடுமலை ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றியம் மற்றும் மடத் துக்குளம் தாலுகா பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு 5 க்கும் மேற்பட்ட குடி நீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோ கம் செய்யப்படுகிறது. இந்நிலையில்,  அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  தொடர் மழை பெய்து வருவதால்,  அணைக்கு நீர்வரத்து அதிகரித்து  வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி,  மொத்தமுள்ள 60 அடியில்  50.81 அடி நீர்  உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினா டிக்கு 893 கன அடியாக உள்ளது. அணை யில் இருந்து  பிரதான கால்வாய், உடு மலை கால்வாய் மற்றும் குடிநீர் என  வினாடிக்கு 237 கன அடி நீர் வெளியேற் றப்படுகிறது. திருமூர்த்திமலைப்  பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை யால் அணை நிரம்பினால், உபரி நீர் பாலாற்றில்  திறக்கப்படும். இதனால் பாலாற்றின் வழியோர கிராமங்க ளுக்கும், கேரள மாநிலம் சித்தூர், ஒல வங்கோடு உள்ளிட்ட வழியோர மக்கள்   பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்ப ணித்துறையினர் அறிவுறுத்தியுள்ள னர். திருமூர்த்தி அணை கடந்த 1997  ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி நிரம் பியது. அதன் பிறகு 24 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு  டிசம்பர் 1 ஆம் தேதி உபரி நீர் பாலாற் றில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீரை முறையாக பாகிர்ந்து தர கோரிக்கை  திருமூர்த்தி அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது. கடந்த மாதம் பருவ மழை தொடங்கிய முதல் வாரத்தில் பிஏபி தொகுப்பு அணைகள் அனைத் தும் நிரப்பியது. பிஏபி தொகுப்பு அணை யில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் எடுக்க முடியாமல், காண்டூர்  கால்வாய் வேலையை காரணம் காட்டி  ஒரு மாதம் தண்ணீர் எடுக்க முடியாமல்  போனது. பின்னர் காண்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் வந்தவுடன், கிராமங்களில் இருக்கும் அனைத்து குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவ சாயிகளின் கோரிக்கையை திட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் கண்டு கொள் ளாமல் போனது தான் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை என்கிறார்கள். அணையில் இருந்து பாசனத்திற்கு தண் ணீர் திறக்கும் போது தண்ணீரை சிக்க னமாக பயன்படுத்த வேண்டும் என சொல்பவர்கள் அணையின் நீரை முறை யாக பாகிர்ந்து தர வேண்டும் என்பதே  அனைத்து விவசாயிகளின் கோரிக்கை யாக உள்ளது.