tamilnadu

திருப்பூர் உழவர் சந்தைகளில் ரூ.10.24 கோடிக்கு காய்கறி விற்பனை

திருப்பூர் உழவர் சந்தைகளில்  ரூ.10.24 கோடிக்கு காய்கறி விற்பனை

திருப்பூர், அக்.7- விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்க றிகள் மற்றும் பழங்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேர டியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில் உழ வர் சந்தைகள் தொடங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் தென் னம்பாளையத்தில் தெற்கு உழவர் சந்தை, புதிய பேருந்து  நிலையம் பின்புறம் வடக்கு உழவர் சந்தை என 2 உழவர் சந்தை கள் செயல்பட்டு வருகின்றன. இதில் திருப்பூர் மாவட்டத்தைச்  சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்து  தினந்தோறும் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை  செய்து வருகின்றனர். திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் கடந்த மாதம் 7,123  விவசாயிகள் 2,185 மெட்ரிக் டன் காய்கறிகளை விற்பனை  செய்திருப்பதன் மூலம் ரூ.7 கோடியே 24 லட்சம் வருவாய் ஈட்டி  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதிய  பேருந்துநிலையம் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தை யில் 3,092 விவசாயிகள் மூலம் 780.9 மெட்ரிக் டன் காய்கறிகள்  விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகள்  ரூ.3 கோடி வருவாய் ஈட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இரு வேறு உழவர் சந்தைகளிலும் மொத்தமாக 2 லட்சத்து  27 ஆயிரத்து 616 வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளதாக வும், கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் சுமார் ரூ.1.3 கோடி குறை வாக விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.