விளையாட்டு மைதானத்தில் காய்கறி சந்தையா? மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு
ஈரோடு, செப். 22- ஈரோடு மாநகரில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தை காய்கறிச் சந்தையாக மாற்றும் மாநகராட்சியின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஈரோடு மாநகரில் உள்ள மகாஜன பள்ளி விளையாட்டு மைதானம் பல ஆண்டுகளாக ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாண வர்களுக்குப் பயிற்சி அளிக்கும் இட மாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற பல இளைஞர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங் கேற்றுள்ளனர். இன்றைய சூழலில், இளைஞர்கள் போதைப் பழக்கங்க ளுக்கு ஆளாகி வரும் நிலையில், இந்த மைதானம் விளையாட்டு ஆர் வம் கொண்ட மாணவர்களுக்கு ஒரு முக்கியப் பயிற்சி மையமாகத் திகழ் கிறது. மாநகரில் பல தனியார் விளை யாட்டு மைதானங்கள் இருந்தா லும், அவை பணம் படைத்தவர்க ளுக்கு மட்டுமே பயன்படுகின்றன. ஆனால், இந்த மகாஜன பள்ளி மைதானம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் அவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்நிலையில், ஈரோடு மாநக ராட்சி நிர்வாகம் இந்த விளையாட்டு மைதானத்தில் வாரச் சந்தை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது இளைஞர்கள் மற் றும் ஏழைக் குழந்தைகளின் விளை யாட்டு உரிமையைப் பறிக்கும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நடவடிக்கையைக் கைவிடுமாறு வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகா செயலாளர் என். பாலசுப்பிரமணி மற்றும் நகர செய லாளர் வி. பாண்டியன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத் தில் மனு அளித்தனர். மேலும், அந்த மைதானத்தை டென்னிஸ், வாலி பால், கால்பந்து போன்ற விளை யாட்டுகளுக்கு ஏற்றவாறு தரம் உயர்த்தி, தூய்மைப்படுத்தி, பாது காப்பான சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.