tamilnadu

img

அமெரிக்க வரிவிதிப்பால் ஜவுளித்துறைக்கு பெரும் பின்னடைவு

அமெரிக்க வரிவிதிப்பால் ஜவுளித்துறைக்கு பெரும் பின்னடைவு

ஈரோட்டில் வேலையிழப்பு அபாயம்

ஈரோடு, செப்.13- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் மீது விதித் துள்ள புதிய, அதிரடியான வரிவிதிப்பு, தமிழ கத்தின் ஜவுளி மற்றும் பிற தொழில்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது. ஈரோடு மாவட்ட ஏற்றுமதி யாளர்கள் மற்றும் தொழில் சங்கங்களின் நிர் வாகிகள், இந்த நிலைமை நீடித்தால், பல தொழில்கள் முடங்கி, ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். ஈரோட்டின் ஜவுளித் துறைக்கு பெரிய பாதிப்பு இதுகுறித்து, ஈரோடு மாவட்ட சிறு தொழில் கள் சங்க செயலாளர் கந்தசாமி (இடிசியா) கூறு கையில், இந்த வரிவிதிப்பால் ஈரோடு மாவட் டத்தில் மட்டும் இதுவரை சுமார் ரூ. 1,000 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் பெட்சீட், டவல், ரெடிமேட் ஆடை கள் உற்பத்தி பெரும்பாலும் நிறுத்தப் பட்டுள்ளன. இதனால், பஞ்சாலைகளும் நேர டியாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பு ஈரோட்டை விட, திருப்பூரிலும் கரூரிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும். ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருக்கும் நிறுவனங்கள் ஒரு சில மாதங்கள் தாக்குப்பிடிக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு இந்த பாதிப்பைச் சமா ளிப்பது கடினம். இந்திய அரசு ஏற்றுமதியா ளர்களுக்கு முன்னர் அளித்துவந்த வரிச் சலு கைகளை மீண்டும் முழுமையாக இல்லா விட்டாலும், 50% வரையேனும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உள்ளூர் சந்தையில் போட்ட முதலைக்கூட எடுக்க முடியாது  ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் செயலா ளர் ரவிச்சந்திரன் கூறுகையில், டிரம்ப்பின் இந்த வரிவிதிப்பு ஒரு தற்காலிக மிரட்டல் உத்தி தான் என நினைக்கிறேன். உக்ரைன்-ரஷ்யா  போர் முடிவுக்கு வரும்போது இந்த நிலைமை  சீரடையும் என நம்புகிறேன். திருப்பூரிலி ருந்து மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.30,000 கோடி  மதிப்பிலான ஜவுளி பொருட்கள் பல்வேறு நாடு களுக்கு ஏற்றுமதியாகின்றன. இதில் பெரும் பகுதி அமெரிக்காவுக்கே செல்கிறது. அமெ ரிக்க ஆர்டர்கள் ரத்தானால், திருப்பூரின் பஞ் சாலைகள் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக் கும். குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த, அதிக விலையுள்ள உயர்தர பருத்தி மற்றும் நூல்களைக் கொண்டு அமெரிக்காவுக்காக உற்பத்தி செய்யப்படும் துணிகளை, உள்நாட் டுச் சந்தையில் விற்பது சாத்தியமில்லை. அவ்வாறு விற்றாலும், போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியாது, இது நிறுவனங்களை நஷ்டத்திற்கு இட்டுச் செல்லும். ஈரோடு நேரடியாக ஏற்றுமதி செய்யா விட்டாலும், சாயமிடுதல், அச்சிடுதல் போன்ற முக்கிய பணிகளை (processing) பெரிய அள வில் மேற்கொள்கிறது. தற்போது, 40 கண் டெய்னர்கள் அனுப்பப்பட்ட இடத்தில், வெறும் 4 கண்டெய்னர்கள் மட்டுமே அனுப் பப்படுகிறது. இது, உள்நாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறைக்கு மத்தியில் வெளிமாநிலத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்றார். அரசு உதவிகள் தேவை: வட்டியில்லா கடன், மானியம் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜ மாணிக்கம் கூறுகையில், அமெரிக்காவின் வரிவிதிப்பினால் ஜவுளித் துறை மட்டுமல்லா மல், உணவுப் பொருட்கள் ஏற்றுமதித் துறை யும் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட ஏற்றுமதி யாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவது, அல்லது மானியம் அளிப்பது போன்ற உதவிகளை அரசு செய்ய வேண்டும். உதாரணமாக, ரூ.500 மதிப் புள்ள ஏற்றுமதிச் சரக்கை உள்நாட்டில் விற் றால், ரூ.150 மட்டுமே கிடைக்கும். இந்த பெரும் இழப்பை ஈடுசெய்ய அரசின் உதவி மிகவும் அவசியம். ஒரு மாத காலத்திற்கு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, பின்னர் தேவை யான மானியங்களை அரசு வழங்கலாம். மேலும், அமெரிக்காவைத் தவிர்த்து மற்ற புதிய சந்தைகளை கண்டறிய முயற்சிக்க வேண்டும். தற்போதைய சூழலில், அமெரிக்க மக்கள்  வரிச்சுமையை ஏற்றுக்கொண்டு இந்திய பொருட்களை வாங்கும் வாய்ப்பு குறைவா கவே உள்ளது. இந்த வரிச்சுமை இடைத்தர கர்களால் பயன்படுத்தப்பட்டு, இந்திய ஏற்று மதியாளர்களுக்கு மேலும் இழப்பை ஏற்ப டுத்தும். டிரம்ப் செய்வது நியாயப்படுத்த முடி யாத ஒன்று. அவர் நம்மை பணிய வைக்கவே இவ்வாறு செய்கிறார். எனவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு, இந்த சவாலைச் சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண் டும்” என்றார். இதேபோன்று, மஞ்சள், தேங்காய், பருப்பு, நார் போன்ற உணவுப் பொருட்களின் ஏற்று மதியும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்க ளைப் பாதுகாக்கும் வகையில், உறுதியான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். தேக்கமடைந்துள்ள ஏற்றுமதி ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்று மதியாளர் சங்க செயலாளர் சிவானந்தன் கூறு கையில், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள், உபகரணங்கள் மற்றும் பிற  பொருட்கள் தற்போது ஏற்றுமதி செய்யப்படா மல் தேக்கமடைந்துள்ளன. அமெரிக்க இறக்கு மதியாளர்கள் அதிகத் தள்ளுபடி கேட்பதுடன், ஆர்டர்களை ரத்து செய்யவோ அல்லது ஒத்தி வைக்கவோ வற்புறுத்துகின்றனர். இதனால், அடுத்த ஆறு மாதங்களுக்கு துணி, நூல்,  பிராசசிங், பேப்ரிக், கார்மென்ட்ஸ் தயாரிப்பு கள் அனைத்தும் பாதிக்கப்படும் சூழல் உரு வாகியுள்ளது. பருவக்கால விற்பனையில் சிக்கல் இந்திய சந்தையில், தீபாவளிக்காக தயாரிக்கப்பட்ட துணிகளைப் பொங்கல் அல்லது ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் அந் தந்த பருவக்காலங்களுக்கு மட்டுமே பொருந் தும். நாகரிகம் மற்றும் வண்ணங்கள் வேக மாக மாறுவதால், அடுத்த பருவக்காலத்திற்கு அந்த ஆடைகளை விற்பது சாத்தியமில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்திய அரசும்,  அமெரிக்க அரசும் உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தொடர் பாதிப்புகள் இந்த பாதிப்பு ஜவுளித் துறையின் சங்கி லித் தொடர் அமைப்பையே கேள்விக்குறி யாக்கியுள்ளது. நூற்பு (Spinning), நெசவு (Weaving), அச்சிடுதல் (Printing), பதப் படுத்துதல் (Processing) மற்றும் ஆடை தயா ரித்தல் (Garment manufacturing) என  அனைத்து நிலைகளிலும் பாதிப்பு ஏற்படும். முதலில் ஏற்றுமதியாளர்கள் மட்டுமே உண ரும் இந்த பாதிப்பு, நாளாக நாளாகத் தொழி லின் அனைத்துப் பிரிவினரையும், பல்லாயி ரக்கணக்கான தொழிலாளர்களையும் நேரடி யாகப் பாதிக்கும். தமிழகத்திற்கு அதிக பாதிப்பு இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 40% அமெ ரிக்காவிற்கு செல்கிறது. இதில் பெரும் பாலான பொருட்கள் சேலம், ஈரோடு, கோவை, பல்லடம் மற்றும் திருப்பூர் போன்ற தமிழக மாவட்டங்களில் இருந்து தயாரிக்கப்படுகின் றன. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்களை கொண்ட ஜவுளித் துறைக்கு இது மிகப்பெரிய பின்னடைவு. திருப்பூர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் தேவையான 60% நூல் இங்கிருந்துதான் செல்கிறது. எனவே, பிற மாநிலங்களை விட தமிழகம், குறிப்பாக ஈரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்படும். கடந்த காலங்களில் ஏற்றுமதியாளர்க ளுக்கு 40% வரை ஊக்கத்தொகை வழங்கப்பட் டது. ஆனால், தற்போது இது 3% முதல் 4%  வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைவானது. அந்நியச் செலாவணி குறை வாக இருந்தபோது, ஜவுளித் துறைதான் இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி யது. எனவே, இந்த நெருக்கடியான நேரத் தில் அரசு அதிக உதவிகளை வழங்க வேண்டும் என்றார். அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் டிரம்ப் வரிவிதிப்பு விவகாரத்திற்கு தீர்வு காண இந்திய அரசு அமெரிக்க அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், வர விருக்கும் ஐநா மாநாட்டில் இந்திய பிரத மர் டிரம்ப்பை சந்திப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், இந்த போர் சூழல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு போன்ற காரணிக ளும் இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி யுள்ளன. இந்த சவாலில் இருந்து மீண்டெ ழுந்து, தொழில் துறையைப் பாதுகாப்பது அர சின் கையில் உள்ளது. -எஸ்.சக்திவேல்

இன்று சிறப்பு கருத்தரங்கம்: எம்.பி.,க்கள் பங்கேற்பு'

அமெரிக்காவின் அடாவடியான வரி விதிப்பால், இந்திய நாட்டின் பொருளாதா ரம் கடுமையாகத் தாக்குதலக்கு உள்ளாகி நவீன காலனியாதிக்கப் பிடியில் சுற்றி வளைக்கப் பார்க்கிறது. அமெரிக்க ஏகா திபத்தியத்தின் நிர்பந்தத்திற்கு அடிபணியா மல் நாட்டின் இறையாண்மையை சுய சார்பை பாதுகாக்கும் அரசியல் உறுதி யுடன் ஒன்றிய அரசு எதிர்கொள்ள வேண் டும். பாதிப்புகளைத் தடுத்து தொழில்களை பாதுகாக்க வேண்டும். மானியம், வரி சலுகை உள்ளிட்ட மாற்றுத்திட்டங்களை உருவாக்க வேண்டும். தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய கட்சிகளின் சார்பில் ஈரோடு பெரி யார் மன்றத்தில் ஞாயிறன்று (இன்று) சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. சிபிஐ மாநி லக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேக ரன் தலைமையில் நடைபெறும் கருத்த ரங்கிற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன் வரவேற்கிறார். திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், திண் டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் மற்றும் சிபிஐ(எம்எல்) விடுதலை  மாநில நிலைக்குழு உறுப்பினர் கே.ஞான தேசிகன் ஆகியோர் கருத்துரையாற்று கின்றனர்.