கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
தருமபுரி, செப்.26- கெட்டுஅள்ளியில் பட்டி யலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கழிவுநீர் கால் வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல் லம்பள்ளி வட்டம், எர்ரப் பையன அள்ளி ஊராட்சிக் குட்பட்ட கெட்டுஅள்ளி கிரா மத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங் குள்ள தெருக்களுக்கு கழிவு நீர் கால்வாய் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இப்ப குதியின் ஒட்டுமொத்த கழி வுநீரை உறிஞ்சுவதற்காக குடியிருப்பு அருகே ரூ.1.41 லட்சம் மதிப்பில் செங்கூத்து உறிஞ்சி குழி அமைக்கப் பட்டது. கழிவுநீர் கால்வாய் அகலம், ஆழம் குறைந்த அளவில் அமைக்கப்பட்ட தால், கால்வாயில் கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது. மேலும், மழைக்காலங்களில் கழிவுநீருடன் சேர்ந்து வெள்ளமும் சாலையி லேயே தேங்குகிறது. கழிவு நீர் தேங்குவதால் துர்நாற் றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவுகிறது. இப்பிரச்சனைகள் குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவ லகத்திலும் மனு அளித்த னர். ஆனால், எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கழிவுநீர் தெருவில் தேங்காதவாறு, கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி யுள்ளனர்.
