tamilnadu

img

தீண்டாமைக் கொடுமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித் தொகை காலம் தாழ்த்தாமல் வழங்க வலியுறுத்தல்

தீண்டாமைக் கொடுமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித் தொகை காலம் தாழ்த்தாமல் வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், செப்.8- திருப்பூர் மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமையில் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு வழங்க வேண்டிய தீருதவித் தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடி யாக வழங்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஆர்.பரமசிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மனு அளித்தார். தீண்டாமைக் கொடுமையில் பாதிக்கப்ப டும் மக்களுக்கு அரசு வழங்க வேண்டிய தீரு தவித் தொகை வழங்குவதில் பெரும் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. உடனடியாக தீரு தவித் தொகைகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். பட்டியலின இளை ஞர்கள் சுயதொழில் செய்ய தாட்கோ திட்டம்  மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கும் போது, பெரும்பகுதி விண்ணப்பங்கள் ஏதாவ தொரு காரணத்தைச் சொல்லி, தள்ளுபடி செய்யப்படுகின்றன. எனவே, சிறப்பு கடனு தவி முகாம்கள் நடத்த வேண்டும். இம்முகாம் களை வட்டார அளவில் நடத்துவதும், தகுதி யுள்ள அனைவருக்கும் கடனுதவி வழங்குவ தும் பட்டியலின இளைஞர்களை தொழில் முனைவோராக்க வழிவகுத்திடும்.  வன்கொடுமை வழக்குகள் மற்றும்  ஆதிதிராவிடர் நலன் சார்ந்த நடவடிக்கைக ளுக்காக திருப்பூர் மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிகண் குழுக்களில், தீண்டாமை ஒழிப்பு  மற்றும் சாதி ஒழிப்புப் பணிகளில் தொடர்ந்து  ஈடுபடுகிற அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவாக அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, தனிநபர்களை குழுவில் இணைப்பதை தவிர்க்க வேண்டும்.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பல பிரிவுகளில் ஒப்பந்த ஊழி யர்களாகப் பணியாற்றும் தூய்மைப் பணி யாளர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும். மேலும், உரிய பாகாதுகாப்பு உப கரணங்கள் வழங்க வேண்டும். குடியிருப் புகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளா கங்களில் உள்ள குறிப்பிட்ட சாதிகளை அடை யாளப்படுத்தும் பெயர்களை நீக்க உடனடி யாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண் டும். ஒத்துழைக்க மறுப்பவர்கள் மீது வழக் குப் பதிவு செய்து, கைது செய்ய வேண் டும். திருப்பூர் மாநகராட்சி, குமரன் சாலை யில் குலாலர் விநாயகர் கோவில் அருகில்  அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் மார்பளவு சிலையை, முழு உருவ வெண்க லச் சிலையாக மாற்றி நிறுவிட தமிழக அர சும் திருப்பூர் மாநகராட்சியும், மாவட்ட நிர்வா கமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும். தாராபுரம் வட்டம், ருத்ராவதி பேரூ ராட்சி சார்பில் குண்டடத்தில் கட்டி முடிக்கப் பட்டு, பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட் டிற்கு வராமல் உள்ள பேருந்து நிலையத்தை  உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக்  கொண்டு வர வேண்டும். திருப்பூர் மாவட்ட த்தில் பயன்பாட்டில் இல்லாத கோவில் நிலங் கள் மற்றும் பூமி தான நிலங்கள், ஆக்கிரமிப் பில் உள்ள பஞ்சமி நிலங்களை, பட்டியலின  மக்களுக்கு விவசாயம் செய்திடவும், வீடற்ற வார்களுக்கு வீட்டு மனைகளாகவும் பிரித்து  வழங்க வேண்டும். காங்கயம் வட்டம், காடை யூர் கிராமம் மற்றும் சின்னாரிபாளையத்தில், 1994 ஆம் ஆண்டு காடையூர் கிராமம் க.ச.எண் : 484, 387/1 (29.54 ஏக்கர்), சின்னாரிபாளையம் க.ச. எண் : 973 / ஏ (28.77 ஏக்கர்) என பட்டியலின மக் கள் 51 பேருக்கு வழங்கப்பட்ட நிலத்தை அள வீடு செய்து, எஃப் - பட்டா வழங்கப்பட வில்லை. எனவே. 22 ஆண்டுகளாகப் பட்டா வுக்காகக் காத்திருக்கும் தேர்வு செய்யப்பட்ட  அனைவருக்கும் எஃப் பட்டா வழங்க மாவட்ட  வருவாய்த் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மா னங்களை செயல்படுத்தக் கோரி மனு வழங் கிய இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ஞான சேகர், பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர் ச.நந்தகோபால் ஆதிதமிழர் ஜன நாயக் பேரவை தலைவர் அ.சு.பவுத்தன் உள் ளிட்டோர் உடன் இருந்தனர்.