அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்க வலியுறுத்தல்
தருமபுரி, ஜூலை 20- அங்கன்வாடி ஊழியர், உதவி யாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என அங்கன்வாடி ஊழி யர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 6 ஆவது மாநாடு, வாணிபர் மஹாலில் ரஞ்சனா நெருளா நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.ராஜாம் பாள் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஏ.ரீத்தா சங்கத் தின் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் என்.ஜான்சிராணி வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் ஆர்.சத்யா அஞ் சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் எம்.லில்லிபுஷ் பம் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.கவிதா, பொருளாளர் என்.தெய்வானை ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். சிஐடியு மாநிலச் செய லாளர் சி.நாகராசன், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். ரத்தினமாலா, மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி, சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.சண்மு கம் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இம்மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி, குடும்ப வரன்முறையுடன் கூடிய பென்சன் வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். அங்கன்வாடி திட்டத்திற்கான நிதி குறைப்பை தவிர்த்து, திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். அனைத்து மையங்க ளுக்கும் ‘வைபை (Wifi)’ இணைப்பு, 5ஜி செல்போன்களை யும், 5ஜி சிம் கார்டையும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காத் திருப்போர் பட்டியலிலுள்ள குறு மைய பணியாளர்களுக்கும், உதவி யாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி மைய செயல்பாட்டிற் கும் அரசு சொந்த கட்டடங்களை கட் டித்தர வேண்டும். பிற துறை பணிக ளில் அங்கன்வாடி ஊழியர், உதவி யாளர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக டி.சுமதி, செயலாளராக சி.கவிதா, பொருளா ளராக என்.தெய்வானை, மாநில செயற்குழு உறுப்பினராக ஆர். கண்மணி, மாவட்ட துணைத்தலை வர்களாக காளீஸ்வரி, ராணி, ஆர். சத்யா, கே.ஜெயந்தி, சத்யா, இணைச்செயலாளர்களாக ஏ. ரீத்தா, எம்.தேவகி, என்.ஜான்சி ராணி, எஸ்.அல்வியா, எஸ்.அல மேலு ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாநில பொதுச்செயலா ளர் டி.டெய்சி நிறைவுரையாற்றி னார். முடிவில், வி.எம்.ராணி நன்றி கூறினார்.