tamilnadu

img

முதலிபாளையம் பகுதியை மாநகராட்சியின் குப்பைக்காடாக மாற்றுவதா?

முதலிபாளையம் பகுதியை மாநகராட்சியின் குப்பைக்காடாக மாற்றுவதா

வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர், ஆக.31- முதலிபாளையம் ஊராட்சி  பகுதியை திருப்பூர் மாநகராட்சி யின் குப்பைக்காடாக மாற்றுவ தாகக்கூறி, ஹவுசிங் யூனிட் பகுதி மக்கள் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில் குப்பை அகற்றுவது பெரும் பிரச் சனையாக உருவெடுத்துள்ளது. மாநகராட்சிக்கு உள்ளேயும், சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளிலும் காலாவதியான பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர். இதனால் மாநகரில் முறையாக குப்பை அகற்றப்படா மல் ஆயிரக்கணக்கான டன் குப்பை  பிரதான சாலைகளிலும், நகர வீதிகளிலும் குவிந்து கிடந்தது. இந்நிலையில், திருப்பூர் - காங்கே யம் சாலை, முதலிபாளையம் ஊராட்சியில் மக்கள் குடியி ருப்பு இல்லாத பகுதியில் குப்பை  கொட்ட மாநகராட்சி நிர்வாகம்  ஏற்பாடு செய்தது. அதன்படி  திருப்பூர் தெற்கு தாலுகாவிற்குட் பட்ட முதலிபாளையம் புல எண்: 393  மற்றும் நல்லூர் புல எண்: 354  பகுதியில் காலாவதியான தனியார்  பாறைக்குழிகளில் திருப்பூர் மாநக ராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்க ளாக குப்பை கொட்டி வருகிறது. பொதுமக்கள் எதிர்ப்பை தடுப்பதற் காக காவல்துறை பாதுகாப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி மக்கள்  கடும் அதிருப்தியும், எதிர்ப்பும்  தெரிவித்துள்ளனர். சட்டவிரோத மாக பல்வேறு வகையான இறைச் சிக் கழிவு, மருத்துவக் கழிவு, ரசாய னக் கழிவு, தொழில் கழிவு, நச்சுக்  கழிவு, காஸ்டிங் கழிவு, பிளாஸ்டிக் கழிவு, கண்ணாடி கழிவு மற்றும் பல குப்பையை இங்கே கொட்டி  வருவதாக சொல்லி எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். தரம் பிரிக்கப்படாத, வகைப்படுத்தப்படாத பல்வேறு வகையான கழிவு குப்பையை ஒன்று சேர்த்து கொட்டுவதால் விஷ வாயு வெளியேறி நீர், நிலம், காற் றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப டுத்தி, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற் பட்டு கடுமையான சுகாதார பாதிப்பை உருவாக்கி கொண்டி ருக்கிறது. இதனால் சுற்றி இருக் கும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு குடியிருக்க முடியாத, நிம்மதி யாக வாழ முடியாத சூழ்நிலை ஏற் படுவதுடன் பொதுமக்கள், கால் நடைகள், விவசாயம், விவசாயிகள்  என எதிர்கால சந்ததிகளே வாழ முடி யாத அளவிற்கு அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், தோல் நோய், புற்று நோய், சுவாசக் கோளாறு, காய்ச் சல், தொடர் இருமல், மலட்டுத் தன்மை, சர்க்கரை நோய் என வாழ்க்கையையே அழிக்கக்கூடிய பல நோய்களும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர். மக்களுக்கு சுகா தாரமான வாழ்க்கையை உத்திரவா தம் செய்ய வேண்டிய அரசு நிர்வா கம், சட்டத்தையும், அதிகாரத்தை யும் கையில் வைத்துக் கொண்டு அதனை தவறாக பயன்படுத்தி வரு வது வன்மையாக கண்டிக்கத்தக் கது என்று கூறினர்.  திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ன ஆனது? திருப்பூர் மாநகராட்சி பகுதி யில் முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்ப டுத்தாமல், பல நூறு கோடி ரூபாய்  ஊழல் செய்து அதனை மூடி  மறைக்க, தொடர்ந்து பாறைக்குழி களைத் தேடித் தேடி அலைந்து, அங்கு குப்பையை கொண்டு சென்று கொட்டி வருவதாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைப்பினர் புகார் கூறுகின்றனர். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தோல்வி அடைந்து விட்டது. அதை மக்கள்  தலையில் போட்டு, முதலிபாளை யத்தை அடுத்த வெள்ளலூர்  குப்பைக் கிடங்காக மாற்ற முயற்சிப் பதாகவும், அதை ஒருபோதும் அனு மதிக்க மாட்டோம் என்றும் அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். உடன டியாக குப்பைக் கழிவுகளை காலா வதியான பாறைக் குழியில் கொட்டு வதை நிறுத்தவும், கொட்டிய குப்பையை திரும்ப எடுக்கவும் முத லிபாளையம், நல்லூர் பகுதி மக்கள்  வலியுறுத்தினர். இக்கோரிக் கையை வலியுறுத்தி வீடுகளில் ஞாயிறன்று கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மக் கள் உணர்வை மதிக்காமல் தொடர்ந்து குப்பை கொட்டினால் மிகப் பெரும் போராட்டம் நடத்தப்ப டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.