tamilnadu

img

தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புகழஞ்சலி

தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புகழஞ்சலி

கோவை, ஆக.3- கோயம்புத்தூர் மலையாள பண் பாட்டு மேடை சார்பில், மறைந்த கேரளம் மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புகழஞ் சலி செலுத்தப்பட்டது. கேரளம் மாநில அரசியல் வரலாற் றில் நீண்ட காலம் வாழ்ந்து, மக்கள் மனதில் நிறைந்திருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவ ரும், முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் கடந்த ஜூலை 21 ஆம்  தேதியன்று காலமானார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிறந்த தலைவரும், சுதந் திரப் போராட்ட வீரருமான வி.எஸ்.அச்சு தானந்தனின் மறைவுக்கு நாடு முழுவ தும் பல்வேறு அமைப்புகள் சார்பில்  புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.  அதன்ஒருபகுதியாக, கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை உள் ளிட்ட 26 அமைப்புகள் ஒருங்கிணைந்து சனியன்று காந்திபுரம் மலையாளம் சமாஜத்தில் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தின. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், கோயம்புத்தூர் மலையாள பண் பாட்டு மேடையின் தலைவர் ராம கிருஷ்ணன், பொதுச்செயலாளர் சந் தோஷ், அமைப்புச் செயலாளர் என்.ஆர்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.