tamilnadu

img

பிச்சை எடுக்கும் போராட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள்

பிச்சை எடுக்கும் போராட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள்

திருப்பூர், ஆக. 25 – அரசு போக்குவரத்து கழகத் தொழி லாளர்கள் கடந்த ஒரு வார கால மாக காத்திருக்கும் போராட்டம் நடத்தி வந்தபோதும், தமிழக அரசு  கண்டு கொள்ளாத நிலையில், திங்க ளன்று சிஐடியு அரசு போக்குவ ரத்துக் கழக தொழிலாளர்கள் போராட் டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். போக்குவரத்து கழங்களை பாது காக்க வேண்டி, பணியில் உள்ள தொழிலாளர்களும், ஓய்வு பெற் றோரும் ஒன்றிணைந்து தொடர் காத் திருப்புப் போராட்டம் திங்களன்றும்  நடைபெற்றது. திருப்பூர் காங்கேயம்  சாலை அரசுப் போக்குவரத்துக் கழக  திருப்பூர் மண்டல அலுவலகம் முன்பு  நடைபெற்று வரும் இந்த போராட்டத் திற்கு சிஐடியு மண்டலப் பொருளா ளர் மனோகரன் தலைமை வகித்தார். போராட்டத்தை வாழ்த்தி பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க அமைப் புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர், சிஐ டியு மண்டலத் துணைத் தலைவர்  கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜ் ஆகியோர் உரையாற்றினர். இதைத் தொடர்ந்து மதியம், திருப்பூர் மண்டல அலுவலகம் முன்பு, தொழிலாளர்கள், ஓய்வூதியர்  மற்றும் அவர்களது குடும்பப் பெண் கள் கலந்து கொண்டு கைகளில் தட்டு  ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஈரோடு ஈரோடு மண்டல தலைமை அலுவ லகம் முன்பு 8 ஆவது நாளாக  தொடர் காத்திருப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழி யர் சங்க மண்டலத் தலைவர் எஸ்.இளங்கோ மற்றும் ஓய்வூதியர் அமைப்பின் தலைவர் பி.ஜெகநாதன் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை வகித்தனர். இதில், சிஐ டியு கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஆர்.நட ராஜ் தலைமையில் ஆதரவு தெரி வித்து ரூ.1000 நன்கொடை அளிக்கப் பட்டது. தொடர்ந்து இயக்க பாடல் களை போராட்டக்குழுவினர் பாடி னர். மேலும், மன்னரும், மந்திரியும்  உரையாடுவது போன்ற நூதன வடி விலான போராட்டமும் இடம் பெற் றது. இதேபோன்று, கோவை, சேலம்,  தருமபுரி உள்ளிட்ட அனைத்து மாவட் டங்களிலும் போராட்டம் நடை பெற்று வருகிறது.