36 ஆவது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்
சேலம், செப் 22 - போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் 36 ஆவது நாளாக காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 16 மாத அரியர்சை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்கு வரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து 36 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் நடைபெற்று வருகின்றனர். சேலம் புதிய பேருந்து நிலையம் மெய்யனூர் போக்கு வரத்து பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில், சிஐ டியு போக்குவரத்து சங்க மண்டலச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, ஓய்வு பெற்ற விரைவு போக்குவரத்து தொழிற் சங்க மாநில நிர்வாகி மணி முடி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். போராட்டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆதரவு கோவை சுங்கம் பணிமனை முன்பு நடைபெறும் போராட் டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் சார்பாக ஆதரவு தெரி வித்து தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வி.சுரேஷ் உரையாற்றினார். இதில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு சார்பாக கோவை கோட்ட செயலாளர் துளசிதரன், தலைவர் குமார், பொருளா ளர் சாமிநாதன் உள்ளிட்ட ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில துணைச் செயலாளர் கனகராஜ், கோவை அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் லட்சுமி நாரா யணன், மாவட்டச் செயலாளர் வேளாங்கண்ணி ராஜ், மாவட் டப் பொருளாளர் மகேஷ்குமார் ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சுரேந்திரன், அருணகிரிநாதன், ஜெரோம் ரோட்ரிக்ஸ் உள்ளி திரளானோர் பங்கேற்றுள்ள னர்.