விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நாளை போக்குவரத்து மாற்றம்
திருப்பூர், ஆக. 28 - திருப்பூரில் சனிக்கிழமை விநாயகர் சிலை கரைப்பு ஊர்வ லம் நடத்தப்படுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றப்பட் டிருப்பதாக மாநகரக் காவல் ஆணையரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் தேவைக்கேற்ப மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பழைய வடக்கு வட்டார போக்குவரத்து சந்திப்பு மற்றும் 60 அடி சாலையில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். 60 அடி சாலை தற்காலிக பேருந்து நிலையமாக செயல்படும். பெருமாநல்லூரிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் போயம்பாளை யத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். போயம் பாளையம் தற்காலிக பேருந்து நிலையமாக செயல்படும். பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெருமாநல்லூர் செல் லும் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் அவிநாசி சாலை வழியாக திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி நால்ரோடு வழியாக செல்லலாம். பெருமாநல்லூரிலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் பூலுவப் பட்டி, நெரிப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றடையலாம். அவிநாசியி லிருந்து திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி, நெரிப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லலாம். பழைய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி மற்றும் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் ராஜீவ் நகர் சிக்னல், செல்லாண்டி அம்மன் துறை, மின்மயா னம், ஊத்துக்குளி ரோடு, தலைமை தபால் நிலையம், புஷ்பா சந்திப்பு, அவிநாசி ரோடு வழியாக செல்லலாம். காங்கேயம் ரோடு, நல்லூரிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் முத்தனம்பாளையம் நால்ரோடு, கோவில்வழி, வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு வழியாக மாற்றுப் பாதை யில் செல்லலாம். பல்லடம் சாலையிலிருந்து தாராபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு, காளிகுமாரசாமி கோவில், பிள்ளையார் நகர், கோவில்வழி வழியாக மாற்றுப் பாதையில் செல்லலாம். பல்லடம் சாலையி லிருந்து அவிநாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், கோவில்வழி, காங்கேயம் ரோடு வழியாக நல்லூர், காசிபா ளையம் சோதனை சாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவினாசி செல்லலாம். மங்கலம் சாலையி லிருந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு செல்லும் வாக னங்கள் பெரியாண்டிபாளையம், முருகம்பாளையம், வித்யா லயம், வீரபாண்டி பிரிவு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல லாம். மங்கலம் சாலையிலிருந்து அவினாசி மார்க்கமாக செல் லும் வாகனங்கள் அணைப்பாளையம் பிரிவு, அணைப்பா ளையம், சலவைப்பட்டறை, சிறுபூலுவபட்டி வழியாக அவி நாசி செல்லலாம். தாராபுரம் சாலையிலிருந்து அவினாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கோவில்வழி, அமரா வதி பாளையம், காங்கேயம் ரோடு வழியாக நல்லூர், காசி பாளையம் சோதனை சாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவிநாசி செல்லலாம்.