மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைக்கழிவுகள் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் அவலம்
நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக நடவுப்பணி துவங்கியது.
சேலம், ஆக.14- ஏற்காட்டின் முக்கியப் பகுதி யில் மலைபோல் தேங்கி காணப் படும் குப்பைக்கழிவுகளால், சுற்று லாப் பயணிகள் முகம் சுழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற் காடு, தமிழ்நாட்டின் முக்கிய சுற்று லாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற் காட்டின் முக்கிய பகுதியாக உள்ள ஒண்டிக்கடை பகுதியில், மலைபோல் குப்பை கழிவுகள் தேக்கமடைந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஏற்காடு நக ரத்தில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் ஒரே இடத்தில் கொட் டப்படுவதாலும், மறுசுழற்சி செய்ய உரிய இடம் வழங்கப்பட் டும், ஒண்டிக்கடை பகுதியில் அதி களவில் கழிவுகள் கொட்டப்படுவ தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. உணவுக்கழிவுகள் அதி களவில் கொட்டப்படுவதால் நாய் கள், பன்றிகள் நூற்றுக்கணக்கில் அப்பகுதியில் உலா வருகின்றன. ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணி களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், கால்நடைகள் பொது வெளியில் திரிவதால் போக்கு வரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், குப்பை மேட்டில் அதிக துர் நாற்றம் வீசுவதால், சுற்றுலாப் பய ணிகளும் முகம்சுழிக்கும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற் றும் ஏற்காடு ஊராட்சி அதிகாரி களிடம் பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும், இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, சிறிய வணிக நிறுவனங்கள் மற்றும் உணவ கங்கள் கொட்டும் கழிவுகளை உரிய முறையில் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். ஒண்டிக்கடை யில் உள்ள மறுசுழற்சி மையத்தை முறையாக பராமரித்து குப்பை கழி வுகளை அப்புறப்படுத்த வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.