தமுஎகச கிளை மாநாடுகள்
கோவை, செப்.15- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளை மாநாடுகள் நடைபெற்றது இதில் நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளை மற்றும் மாவட்ட மாநாடுகள் நடை பெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, சிங்காநல்லூர் கிளை மாநாடு ஞாயிறன்று சிங்காநல்லூர் தியாகி முத்து நிலையத் தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ந.அருள்மணி தலைமை வகித்தார். ஜோ.பிஜூ வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் இரா.பானுமதி துவக்கவுரை யாற்றினார். மாநாட்டில் நீ அடிமை இல்லை”எனும் நூலை நிலா கதிரவன் அறிமுகம் செய்து பேசினார். நூல் ஆசிரியர் கோகிலா அய்யந்துரை ஏற்புரை யாற்றினார். “மணமகளைத் தேடிப் பார்த்த அனுபவங் கள்” மற்றும் “அறுபதுக்குப்பின் வாழ்க்கை” என்ற புத்த கத்தை வெ.பாலசுப்பிரமணியும், பாத்திமா ஆகி யோர் அறிமுகம் செய்து பேசினர். நூலாசிரியர் சோ. சண்முகசுந்தரம் ஏற்புரையாற்றினார். மேலும் திரை விமர்சனம், கவிதை வாசிப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. மாநாட்டில், தலைவராக எல்ஜி.சிவ குமார், செயலாளராக காளிநாதன், பொருளாளர் பிஜூ உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட் டச் செயலாளர் அ.கரீம் வாழ்த்திப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் மு.ஆனந்தன் நிறைவுரையாற்றினார். முடி வில், த.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார். இதேபோன்று, கோவை தாமஸ் கிளப்பில் நடை பெற்ற அணங்கு கிளை மாநாட்டிற்கு தலைவர் கலை வாணி தலைமை வகித்தார். தமிழறிஞர் தங்கமுரு கேசன் துவக்கவுரையாற்றினார். இதில், முனைவர் பி. அனுராதா எழுதிய சங்கச் சமூகமும் பெண்ணும் சூழலி யல் பார்வை’ எனும் நூலை மாநில செயற்குழு உறுப்பி னர் கவிஞர் மீ.உமா மகேஸ்வரி வெளியிட பேரா.மணி மேகலை, பேரா.அருணா, கவிஞர் இர.பாக்கியலட்சுமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கவிஞர். சுடர் விழி அறிமுகம் செய்து பேசினார். முனைவர் பி.அனுராதா ஏற் புரையாற்றினார். கவிஞர் மீ.உமா மகேஸ்வரி படைப்பு லகம் எனும் தலைப்பில் மாவட்டச் செயலாளர் அ.கரீம் சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் மதிப்புறு தலைவராக கவிஞர் மீ. உமா மகேஸ்வரி, தலைவராக கலைவாணி, செயலாளர் முனைவர் வெ.மைதிலி உள்ளிட்ட 16 பேர் புதிய நிர்வாகி களாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணைத் தலை வர் மு.ஆனந்தன் நிறைவுறையாற்றினார். கவிஞர் பர் வீன் பானு நன்றி கூறினார்.