tamilnadu

img

தலைமை நீதிபதி மீது காலணி வீசிய சனாதன வெறியர் திருப்பூர் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தலைமை நீதிபதி மீது காலணி வீசிய சனாதன வெறியர் திருப்பூர் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 7 - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி  பி.ஆர்.கவாய் அமர்வில், கூச்சலிட்டு காலணியை வீசிய சனாதன வெறிய ரைக் கண்டித்து திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் கோபாவேச ஆர்ப்பாட்டம் நடத்தினர். உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே தலைமை நீதிபதி கவாய் மீது வழக்க றிஞர் ஒருவர் காலணியை வீசி இருக்கி றார். இச்செயல் கடும் அதிர்ச்சி ஏற்ப டுத்தி இருக்கும் நிலையில் நீதித்துறை  மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை  கொண்டோர் கடும் கண்டனம் தெரி வித்திருக்கின்றனர். இந்த நிலையில் உச் சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் அரசியல் அமைப்புச் சட்டத் தின் மீதான தாக்குதலாகும், மதசார் பற்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குத லாகும் என்று அகில இந்திய வழக்க றிஞர் சங்கம் கண்டித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக திருப்பூரில் செவ்வாயன்று ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தின் முன்பாக அகில இந் திய வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய  வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர்  அ.மணவாளன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.பொன்ராம், திமுக வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பார்த்திபன், மதிமுக வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் கந்த சாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங்க  மாவட்டப் பொருளாளர் ஒ.உதயசூரி யன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினார்.  இதில் வழக்கறிஞர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் அமர்நாத், மூத்த  வழக்கறிஞர்கள், தமயந்தி, வை.ஆனந் தன் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். முடிவில் சங்கத்தின் மாநி லக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.தமயந்தி நன்றி கூறினார்.