tamilnadu

img

காப்பீடு திட்டத்தில் காசில்லா மருத்துவ வசதியை வழங்க திருப்பூர் மாவட்ட ஓய்வூதியர் சங்க மாநாடு கோரிக்கை

காப்பீடு திட்டத்தில் காசில்லா மருத்துவ வசதியை வழங்க  திருப்பூர் மாவட்ட ஓய்வூதியர் சங்க மாநாடு கோரிக்கை

திருப்பூர், செப்.19 - தமிழ்நாடு அரசு அனைத்து துறை  ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப் பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடு களை களைந்து, காசில்லாத மருத்துவ  வசதியை வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்  சங்க திருப்பூர் மாவட்ட மாநாடு கோரி  உள்ளது.  திருப்பூர் ஆலங்காடு சமரச சுத்த  சன்மார்க்க சத்திய சங்கத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க திருப் பூர் மாவட்ட ஐந்தாவது மாநாடு வெள்ளி யன்று நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் க.சண்முகம் சங்க கொடியை ஏற்றி வைத்து, மாநாட்டிற்கு தலைமை  தாங்கினார். மாவட்ட துணைத்தலை வர் மணிவேலு அஞ்சலி தீர்மானம் வாசிக்க, மாவட்ட இணைச்செயலாளர்  ஏ.குணசேகரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன் னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அக மது மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் சோ.பாலகிருஷ்ணன் அறிக்கை முன்  வைத்தார். பொருளாளர் கி.மேகவர் ணன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித் தார்.  மாவட்ட கருவூல அலுவலர் பி. முருகேசன், சிஐடியு திருப்பூர் மாவட்டச்  செயலாளர் கே.ரங்கராஜ், ஓய்வு பெற்ற  ஆசிரியர் நல சங்க மாவட்டத் தலைவர்  மா.நாட்ராயன், அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் மா.பாலசுப்பிரம ணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இம் மாநாட்டில் சத்துணவு, அங் கன்வாடி, வருவாய் கிராம உதவியா ளர்கள், ஊராட்சி செயலர்கள் கிராமப் புற நூலகர்கள் உள்ளிட்ட அனைவ ருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும், பழைய ஓய்வூ தியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது பூர்த்தியானவர்க ளுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க  வேண்டும், மருத்துவப்படி மாதம் ரூ. 1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. நிர்வாகிகள் ஆர்.நடராஜன், பி. மாயன் குட்டி, செ.நடராஜன், எம்.பாக்கி யம், பி.ஜெயபால் ராஜ் உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.  சங்கத்தின் மாவட்டத் தலைவராக கி. மேகவர்ணன், மாவட்டச் செயலாளராக  சோ.பாலகிருஷ்ணன், மாவட்டப் பொரு ளாளராக எம்.பாலச்சந்திரமூர்த்தி, துணைத் தலைவர்களாக க.சண்முகம், பெ.மணிவேலு, கே.ராஜேந்திரன், மின் னல் கொடி, மாவட்ட இணைச்செயலா ளர்களாக ஏ.குணசேகரன், ஏ.ராணி, கே. ஆறுமுகம், எஸ்.துரைராஜ் மற்றும் மாவட்டத் தணிக்கையாளர்கள் து.ரா ஜகோபால், பி.மகுடேஸ்வரன், மாநில  செயற்குழு உறுப்பினர்களாக அரங்க நாதன், கி.மேகவர்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இம்மாநாட் டில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து பெண்கள் உள்பட ஓய்வு  பெற்றோர் 152 பேர் கலந்து கொண்ட னர். மாநில துணைத்தலைவர் டி. குப்பன் நிறைவுரையாற்றினார். முடி வில் எம். பாலச்சந்திர மூர்த்தி நன்றி கூறி னார். மாவட்ட மாநாட்டிற்கு முன்னதாக,  கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட் டது.