10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க திருப்பத்தூர் ஓய்வூதிர் மாநாடு தீர்மானம்
திருப்பத்தூர்.செப்,28- திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள லயன்ஸ் கிளப் அரங்கில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 5 வது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் ராசு தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கார்மேகம் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் நேரு, மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாண்டி யன் மற்றும் அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக மாவட்ட துணை தலைவர் சேகரன் நன்றி கூறினார்.மாநில துணைத் தலைவர் அரங்கநாதன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், ஆளும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை அனைத்தையும் காலம் கடத்தாமல் உடனடி யாக நிறைவேற்ற வேண்டும், 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
