மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது குண்டர் சட்டம்
உதகை, ஜூலை 26- நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் உதகையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றினார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த அரசு பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்தும், அப்போது உடலில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் காவல்துறையின ரால் வழங்கப்பட்டுள்ளது. அப்போது, பள்ளியில் இருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில் குமார், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் அத்துமீற லில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இதேபோல் 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செந்தில்குமார் மீது புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரி களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் உதகை ஊரக காவல் ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீசார் விசா ரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். இந்நிலையில் செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் லட்சுமி பவ்யா வெள்ளியன்று உத்தரவிட்டார். இதனைய டுத்து உதகை கிளை சிறையில் இருந்த செந்தில்குமார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ரூ.21,933 கோடி கடன் வழங்க இலக்கு
நாமக்கல், ஜூலை 26- நாமக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கிகள் சார்பில், நிகழாண்டில் ரூ.21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்ட முன்னோடி வங் கிகள் மூலம் ரூ.21,933.58 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ள தாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்டத்திற்கு 2025 – 26 ஆம் ஆண்டுக்கு, விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.14,296.78 கோடி, சிறு, குறு நடுத்தர தொழில் கடனாக ரூ.6,916.25 கோடி, கல்விக்கடனாக ரூ.45.04 கோடி, வீட்டுக்கடனாக ரூ.141.74 கோடி மற்றும் இதர கடன்களுக்கு ரூ.381.08 கோடி என மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 2024 - 25 ஆம் ஆண்டில் ரூ.19,956.23 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு ரூ.18,002 கோடி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் ரூ.3,931.02 கோடி (21.87 சதவிகிதம்) அதிகமாக கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை 20 ஆண்டுகள் சிறை
தருமபுரி, ஜூலை 26- சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த முதியவ ருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம், பி.அக்ரஹா ரம் மேலத்தெருவைச் சேர்ந் தவர் மு.வெங்கடேசன் (55). இவர் மீது கடந்த 22.07.2023 ஆம் தேதியன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பென்னாகரம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட் டது. தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத் தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், வெங்கடேசனுக்கு 20 ஆண் டுகள் கடுங்காவல் தண் டனையும், ரூ.25 ஆயிரம் அப ராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.